Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சூரிய வெளிச்சம் கிருமித்தொற்றை எதிர்கொள்ள உதவுமா?

"வெப்பம் மிகுந்த சூழல்களில் கிருமி தாக்குப்பிடிக்காது என்றும் மற்றவர்களுக்குப் பரவும் ஆற்றலை அது இழந்துவிடும்."

வாசிப்புநேரம் -

COVID-19 கிருமி பரவி வரும் வேளையில், நமது உடல்நலனைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம்.

கிருமித்தொற்றை எதிர்கொள்ள வெப்பம், காற்றோட்டம், சூரிய வெளிச்சம் ஆகியவை உதவும் என்கின்றார் மருத்துவர் கஸாலி.

வெப்பம் மிகுந்த சூழல்களில் கிருமி தாக்குப்பிடிக்காது என்றும் மற்றவர்களுக்குப் பரவும் ஆற்றலை அது இழந்துவிடும் என்றும் அவர் கூறினார்.

உடல்நலனைப் பேண மக்கள் என்ன செய்யலாம்?

அவ்வப்போது, சூரிய வெளிச்சம் உடலில் படுவது நல்லது.

சூரிய வெளிச்சம் நம் மீது படுவது, வைட்டமின் D-ஐ வழங்கும். அது உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையைக் கொண்டது.

எனினும் உச்சிவெயிலைத் தவிர்ப்பது சிறப்பு.

சூரியன் உச்சியில் இருக்கும்போது, அதன் கதிர்கள் நமது தோலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். காலை நேரத்திலோ, மாலை நேரத்திலோ, வெளியே சென்று, உடற்பயிற்சி செய்வது சிறந்தது. பிள்ளைகளை அழைத்துக்கொண்டு, சற்று நடந்து வரலாம். 30 நிமிடங்களிலிருந்து 1 மணி நேரம் வரை போதுமானது. 

அத்துடன், சலவை செய்யப்பட்ட துணிகளை நல்ல வெயிலில் காய வைக்கலாம்.

புற ஊதாக் கதிர்களும், ஒளி, சூரிய வெப்பமும் கிருமியை அழிக்கும் ஆற்றல் கொண்டவை என்றார் மருத்துவர் கஸாலி.


வீடுகளின் அறைகளில் வெப்பநிலையை அதிகரிப்பது நல்லது.குளிர்சாதனத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, மின்விசிறிகளைப் பயன்படுத்தலாம்.

அத்துடன் வீட்டில் காற்றோட்டத்தையும் அதிகரிக்கவேண்டும்.

வீட்டில் போதுமான காற்றோட்டம் இருப்பது முக்கியம்.
அதை அதிகரிக்க, வீட்டின் கதவுகளையும் சன்னல்களையும் திறந்து வைக்கலாம். 

மருத்துவர் கஸாலி. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்