Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சாலையில் வாகன நெரிசல்..ஹெலிகாப்டர் டாக்ஸி தீர்வாகுமா?

வாகன நெரிசலைத் தவிர்க்க மாற்றுப் போக்குவரத்தாக ஹெலிகாப்டர் டாக்ஸிகளை சிலர் விரும்புகின்றனர்!

வாசிப்புநேரம் -
சாலையில் வாகன நெரிசல்..ஹெலிகாப்டர் டாக்ஸி தீர்வாகுமா?

படம்: AFP

வாகன நெரிசலைத் தவிர்க்க மாற்றுப் போக்குவரத்தாக ஹெலிகாப்டர் டாக்ஸிகளை சிலர் விரும்புகின்றனர்!

நியூயார்க்கிலிருந்து (New York) ஜக்கர்த்தா (Jakarta) வரை பல இடங்களில் ஹெலிகாப்டர்கள் மாற்றுப் போக்குவரத்தாகப் பிரபலமடைந்து வருகின்றன. ஹெலிகாப்டர்கள் பல ஆண்டுகளாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இருந்து வந்துள்ளன.

படம்: AFP

ஆனால் சமீபகாலமாக அவற்றைப் பயன்படுத்துவதற்கான கட்டணம் சரிந்துள்ளது. கடன்பற்று அட்டையும் திறன்பேசியும் இருந்தால் போதும்.

யார் வேண்டுமாலும் ஹெலிகாப்டரில் பயணம் செய்யலாம். அதுவும் வாகன நெரிசல் அதிகமுள்ள தென்கிழக்காசியாவில் ஹெலிகாப்டர் டாக்ஸிகளை முதலில் சோதித்துப் பார்ப்பது முக்கியம் என்கிறார் Bell Helicopter நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி.

சிங்கப்பூர் மாநாடு ஒன்றில் பேசிய அவர் சோதனைகள் வெற்றிகரமாக இருந்தால் ஹெலிகாப்டர் டாக்ஸிகளை மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யலாம் என்றார்.

இதிலிருக்கும் சிக்கல்களும் மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டன. ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவதற்குப் பொருத்தமான தளம் எல்லா இடங்களிலும் இருக்காது.

அதோடு சில இடங்களில் பொதுப்பயனீட்டுக்காக உள்ள ஹெலிகாப்டர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே ஆகாயத்தில் அனுமதிக்கப்படுகின்றன.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்