Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

விக்கல் எப்போது சிக்கலாகும்?

விக்கல் ஒருவருக்கு எப்போது வரும், எப்படி வரும், எப்போது நிற்கும் என்பது மாயமான ஒன்று. 

வாசிப்புநேரம் -
விக்கல் எப்போது சிக்கலாகும்?

(படம்: Pixabay)

விக்கல் ஒருவருக்கு எப்போது வரும், எப்படி வரும், எப்போது நிற்கும் என்பது மாயமான ஒன்று.

பேசும் போது விக்கல் வந்தால் அது பெரும் தொந்தரவாகவும் இருக்கும்.

விக்கல் எல்லாருக்கும் வரும்.

வயது, எடை, பாலினம் என்ற பாகுபாடு இல்லாதது அது.

அதிகமாகச் சிரிப்பது, மிகுதியாக உண்பது, உணர்வுகள் கட்டுக்கடங்காமல் போவது போன்ற சில காரணங்களால் கூட விக்கல் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சில வித்தியாசமான காரணங்களையும் மருத்துவர்கள் முன்வைக்கின்றனர்.

அவற்றில் தூக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் மாத்திரைகள், காரமான உணவுகளும் உள்ளன.

எதனால் விக்கல் வருகிறது:

நமது வயிற்றுப் பகுதியை நுரையீரல் பகுதியிலிருந்து பிரிக்கும் Diaphragm-இல் விக்கல் தோன்றுகிறது.

நுரையீரல் பகுதியில் காற்று நுழைவதால் பேசும் குழாயில் தடங்கல் ஏற்பட்டு நமது சத்தம் தடைபடுகிறது.

ஏன் Diaphragm அவ்வாறு செய்கிறது என்பதற்குக் காரணம் இன்னும் கண்டுடிக்கப்படவில்லை.

சில முறை விக்கல், வந்த நேரத்தில் காணாமல் போய்விடும். அதற்கு மருத்துவ ரீதியான விளக்கம் இல்லை.

எவ்வளவு நேரம் விக்கல் நீடிக்கும்:

முதியவர்களுக்கு விக்கல் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது.

சராசரியாக விக்கல் சில நிமிடங்களில் நின்றுவிடும் அல்லது சில மணி நேரம் கூட இருக்கும்.

விக்கல் 48 மணி நேரத்திற்கு அதிகமாக நீடித்தால் அல்லது அடிக்கடி வந்தால் மருத்துவரைச் சென்று பார்ப்பது சிறந்தது.

எப்படி விக்கலை நிறுத்துவது:

இணையத்தில் பல விசித்திரமான தகவல்கள் இருக்கும் அவற்றைப் பின்பற்ற வேண்டாம் என்றும் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர்.

பயம் காட்டினால் விக்கல் நிற்கும் என்பார்கள். ஆனால் அதற்குப் பின்னால் அறிவியல் உள்ளது.

மூச்சைக் கட்டுப்படுத்துவதால் விக்கல் நிற்கும். ஒருவர் நமக்கு பயம் காட்டினால் நாம் சட்டென்று பெருமூச்சு விடுவோம். அதனால் கூட விக்கல் நிற்கும் வாய்ப்புகள் உள்ளன.

மூச்சைக் கட்டுப்படுத்துவது ஒரு நல்ல வழி என்கின்றனர் மருத்துவர்கள்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்