Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வெளிநாட்டுப் பயணம் செல்வதற்கு முன் திறன்பேசிகளுக்குச் செய்யவேண்டியவை

முக்கியமான அனைத்துத் தகவல்களும் அதில்தான் இருக்கும். வெளிநாட்டில் அந்தத் திறன்பேசி முழுமையாகப் பயன்தர சில முன்னேற்பாடுகளை நீங்கள் செய்யவேண்டும். 

வாசிப்புநேரம் -

விடுமுறை நாட்களில் வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் தங்கள் திறன்பேசிகளைக் கடப்பிதழுக்கு இணையாகப் பார்ப்பார்கள்.

முக்கியமான அனைத்துத் தகவல்களும் அதில்தான் இருக்கும்.

வெளிநாட்டில் அந்தத் திறன்பேசி முழுமையாகப் பயன்தர சில முன்னேற்பாடுகளை நீங்கள் செய்யவேண்டும். 

அந்தப் பட்டியல் இதோ...

1. இணையப் பயனீட்டு அளவைச் சரியாக தேர்வு செய்யவேண்டும்.
(Mobile data package)

2. மின்கலன்கள் சரியாக வேலை செய்வதை உறுதி செய்யுங்கள்.
(Batteries)

3. கையில் எடுத்துச் செல்லும் மின்னூட்டச் சாதனங்கள் (power bank) குறைந்தது இரண்டாவது எடுத்துச் செல்லுங்கள்.

4. மின்னேற்றுக் கம்பிவடம் (Charging cable) இரண்டு இருந்தால் நல்லது. ஒன்று ஹோட்டல் அறையிலும் ஒன்று உங்கள் பயணப் பையிலும் இருப்பது நல்லது. 

5. வெளிநாட்டு சிம் அட்டை (sim card) மிதமிஞ்சிய கட்டணத்தைக் குறைக்க உதவும். அதை இங்கிருக்கும்போதே இணையத்தில் வாங்கி வைத்துக் கொள்வது பதற்றத்தைக் குறைக்கும்.

6. பயணத்திற்குத் தேவையான செயலிகளையும், கூகுல் வரைபடத்தையும் முன்கூட்டியே வீட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

7. சிம் அட்டையைத் திறன்பேசியிலிருந்து வெளியே எடுக்கத் தேவையான கூர்மையான ஊசியைக் கையோடு எடுத்துச் செல்லுங்கள். 

8. செல்லும் நாட்டு மின்சாரக் கட்டமைப்புக்கு ஏற்ற மின்னிணைப்புச் சாதனங்களை (PLUG ADAPTOR) எடுத்துச் செல்லுங்கள். சில ஹோட்டல்களில் இதற்குப் பெருந்தொகை கட்டணமாக வசூலிப்பார்கள். 

9. வெளிநாட்டு சிம் அட்டையைப் பொருத்தினால், உங்கள் திறன்பேசி வேலை செய்யுமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பெரும்பாலான திறன்பேசிகள் Unlock செய்யப்படிருப்பதால் பிரச்சினை இருக்காது. இருந்தாலும் அதைச் சரிபாருங்கள்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்