Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நீண்ட விடுமுறைகளின்போது என்ன செய்யலாம்?

எதிர்வரும் கூடுதல் நீண்ட விடுமுறைகளை எப்படிச் செலவழிக்கலாம் என்று இப்போதே திட்டமிட ஆரம்பித்துள்ளவர்களுக்குச் சில யோசனைகள்!

வாசிப்புநேரம் -
நீண்ட விடுமுறைகளின்போது என்ன செய்யலாம்?

(படம்: Pixabay)


சிங்கப்பூரில் இவ்வாண்டு 4 நீண்ட விடுமுறைகள் இருந்தன.

எதிர்வரும் கூடுதல் நீண்ட விடுமுறைகளை எப்படிச் செலவழிக்கலாம் என்று இப்போதே திட்டமிட ஆரம்பித்துள்ளவர்களுக்குச் சில யோசனைகள்!

1. 2இலிருந்து 3 நாள் பயணம் மேற்கொள்ளலாம்

அண்டை நாடான மலேசியாவுக்குப் பேருந்து அல்லது கார் மூலம் எளிதில் சென்று வரலாம்.

அல்லது அருகிலுள்ள பாத்தாம் போன்ற இடங்களுக்கும் 2 அல்லது 3 நாட்கள் பயணம் செய்யலாம்.

சுவையான உணவு, பொருள்கள் வாங்குவது போன்ற பல நடவடிக்கைகள் மிக அருகில் இருக்கும்போது நீண்ட விடுமுறை பற்றி அதிகம் யோசிக்க வேண்டியதில்லை.

2. சிங்கப்பூரிலேயே ஒரு நல்ல விடுதியில் தங்கலாம்

(படம்: Pixabay)

வெளிநாட்டுப் பயணம் அலுப்பாக இருக்கிறதா? சிங்கப்பூரிலேயே ஒரு நல்ல விடுதியிலோ ஹோட்டலிலோ தங்குவதற்குப் பெயர் staycation.

ஹோட்டலில் பிடித்த உணவைச் சாப்பிடுவது, நீச்சல் குளம் செல்வது, facials போன்ற அழகுப் பராமரிப்புச் சேவைகளுக்குச் செல்வது என்று விடுமுறையை இனிதே கழிக்கலாம்.

3. வீட்டைச் சுத்தம் செய்வது

(படம்: Pixabay)

வீட்டிலுள்ள பொருள்களை ஒழுங்குப்படுத்த நேரம் இல்லாமல் 'பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்று நினைத்திருப்போம்.

அத்தகைய வேலைகளைச் செய்வதற்கு நீண்ட விடுமுறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

4. புதிய திறனை வளர்த்துக்கொள்வது

புதிய மொழியைக் கற்றுக்கொள்ள விருப்பமா? அல்லது வேலையிடத்தில் சிறந்து விளங்க வேறு ஒரு திறனை வளர்த்துக்கொள்ளத் திட்டமா? நீண்ட விடுமுறையின்போது இணைய வகுப்புகள், செயலிகள் மூலம் சுலபமாக அவ்வாறு செய்யமுடியும்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்