Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பல இன நடிகர்கள் கொண்ட திரைப்படங்களுக்கு நல்ல வசூல்: ஆய்வு

அமெரிக்காவின் பல்லின சமுதாயத்தை நன்கு பிரதிபலிக்கும் திரைப்படங்களே உலகளவில் அதிக வசூல் பெறுவதாக அண்மைக் கருத்தாய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

வாசிப்புநேரம் -
பல இன நடிகர்கள் கொண்ட திரைப்படங்களுக்கு நல்ல வசூல்: ஆய்வு

(படம்: REUTERS/Andrew Kelly)


அமெரிக்காவின் பல்லின சமுதாயத்தை நன்கு பிரதிபலிக்கும் திரைப்படங்களே உலகளவில் அதிக வசூல் பெறுவதாக அண்மைக் கருத்தாய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

தொலைக்காட்சி, திரைப்படத்துறை தொடர்பில் 2016ஆம் ஆண்டில் வெளிவந்த தகவலை ஆராய்ந்தது கலிஃபோர்னியா பல்கலைக்கழகம்.

அதிக வசூலைக் குவித்த 200 படங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

"Captain America: Civil War", "Suicide Squad" போன்ற திரைப்படங்களில் ஐந்து நடிகர்களில் குறைந்தது ஒருவர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்பதை ஆய்வு சுட்டியது.

பல்லின நடிகர்கள் கொண்ட திரைப்படங்கள் அமெரிக்காவுக்கு வெளியில் அவ்வளவாக சோபிக்க மாட்டா என்று முன்னர் கருதப்பட்டது.

அமெரிக்காவின் மக்கள் தொகையில் சுமார் 40 விழுக்காட்டினர் சிறுபான்மை இனத்தவர், 51 விழுக்காட்டினர் பெண்கள்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்