Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஹாங்காங்கின் இரு முகங்கள்

ஹாங்காங்கிற்கு இரண்டு முகங்கள் உண்டு. எதிர்காலத்தைக் காட்டும் கட்டடங்களும் பழமையைப் பறைசாற்றும் கட்டடங்களும் அங்கு ஒருசேர இருப்பதைப் பலரும் அறிவதில்லை.

வாசிப்புநேரம் -
ஹாங்காங்கின் இரு முகங்கள்

ஹாங்காங். படம்: Pixabay

ஹாங்காங்கிற்கு இரண்டு முகங்கள் உண்டு. எதிர்காலத்தைக் காட்டும் கட்டடங்களும் பழமையைப் பறைசாற்றும் கட்டடங்களும் அங்கு ஒருசேர இருப்பதைப் பலரும் அறிவதில்லை.

நவீனமயமாகும் அதே வேளையில் பழமையைப் பாதுகாக்கும் பொறுப்பும் உள்ளது.

2009ஆம் ஆண்டில், அரசாங்கம் 1,444 பழமையான கட்டடங்களைப் பாதுகாப்பு முயற்சிகளுக்காக அடையாளங்கண்டது. ஆனால் அவற்றில் சுமார் 50 இடிக்கப்பட்டு விட்டன அல்லது பெரிதளவில் மாற்றங்கண்டுள்ளன.

அந்தக் கட்டடங்கள், மரபுடைமை மதிப்பிற்கு ஏற்ப மூன்று தரநிலைகளாகப் பிரிக்கப்பட்டன. இருப்பினும் எந்தக் கட்டடமும் தகர்க்கப்படுவதற்கு அல்லது மாற்றப்படுவதற்கு எதிராக சட்டபூர்வப் பாதுகாப்பைப் பெறவில்லை. நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 177 கட்டடங்களுக்கு மட்டுமே தகர்க்கப்படுவதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

நிலப் பற்றாக்குறை நிலவும் ஹாங்காங்கில் மறுசீரமைப்பிற்குக் கட்டடங்களைத் தகர்ப்பதா அல்லது பழமையைக் கட்டிக்காப்பதா என்னும் சவால் எழுந்துள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்