Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சுடச்சுட தேநீர் குடிக்கும் பழக்கமா?...நிறுத்துங்கள்

சுடச்சுடத் தேநீர்  குடிப்பது இதமாக இருக்கலாம். சூடான தேநீர் குடிப்பவர்களுக்கு உணவுக்குழாய்ப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகரிப்பதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சுடச்சுட தேநீர் குடிக்கும் பழக்கமா?...நிறுத்துங்கள்

(படம்: 8 days)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சுடச்சுடத் தேநீர் குடிப்பது இதமாக இருக்கலாம். சூடான தேநீர் குடிப்பவர்களுக்கு உணவுக்குழாய்ப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகரிப்பதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

சுமார் பத்தாண்டு காலம் நடத்தப்பட்ட ஆய்வில், தேநீரை 60 டிகிரி செல்ஸியஸுக்கும் மேல் சூடாகக் குடித்தவர்களுக்கு உணவுக்குழாய்ப் புற்று நோய் வரும் அபாயம் இரட்டிப்பாக இருந்தது. ஆறவைத்து தேநீர் அருந்தியவர்கள் அல்லது தேநீர் அதிகம் அருந்தாதவர்களுக்கு அந்த அபாயம் குறைவாக இருந்தது.

அமெரிக்க புற்றுநோய் சங்கம் நடத்திய ஆய்வின் முடிவு International Journal of Cancer சஞ்சிகையில் வெளிடயப்பட்டது.

65 டிகிரி செல்ஸியஸுக்கும் அதிகமான வெப்பநிலையில் பானங்கள் அருந்துவது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் அனைத்துலக ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.

தேநீரை முற்றிலும் நிறுத்திவிடத் தேவையில்லை என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள் ஆனால் அதை ஆறவைத்துக் குடிப்பதே நன்று என்று கூறுகின்றனர் 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்