Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உலகெங்கும் ஒரேபோன்ற அவசரத் தொலைபேசி எண்கள் - ஏன்?

முன்பு இருந்த தொலைபேசிகளில் தவறுதலாக எண்களை அழுத்தும் வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. அதனைத் தவிர்க்கவும் பெரும்பாலும் 999 என்ற எண் அவசரகாலத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.

வாசிப்புநேரம் -
உலகெங்கும் ஒரேபோன்ற அவசரத் தொலைபேசி எண்கள் - ஏன்?

(படம்: Pixabay)

அவசரகாலத்தின்போது நிதானமாக இருப்பது மிகவும் கடினம்.

பதற்றம் அதிகரிக்கும்போது நம்மைச் சுற்றி நடப்பவை மட்டுமே மனத்தில் நிற்கும்.

உதவிக்கு யாரையாவது அழைக்க வேண்டும் என்றால் அவர்களின் தொலைபேசி எண் கூட சில வேளை ஞாபகத்தில் இருக்காது.

அதுவும் சிறுவர் முதல் பெரியவர்வரை கைத்தொலைபேசி வைத்திருக்கும் இந்தக் காலத்தில் பெரும்பாலோர் எண்களை மனப்பாடம் செய்துவைத்துக்கொள்வதில்லை.

பதற்ற நிலையில் அதிகச் சிரமம் இல்லாமல் அழைக்கக் கூடிய எண்களாக இருக்க வேண்டும்.

அவசரகாலத் தொலைபேசி எண்கள் ஒரே மூன்று எண்களையோ மொத்தம் மூன்று எண்களையோ கொண்டிருப்பதற்கான முக்கியக் காரணங்களில் அதுவும் ஒன்று.

 (படம்: Pixabay)

முன்பு இருந்த தொலைபேசிகளில் தவறுதலாக எண்களை அழுத்தும் வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. அதனைத் தவிர்க்கவும் பெரும்பாலும் 999 என்ற எண் அவசரகாலத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.

ஏனெனில் தொலைபேசியின் ஆகக் கடைசியில் இருப்பது '9'.

குறைவான எண்களைச் சீக்கிரமாக அழுத்தலாம்.

உதவி நாடுவதற்கான நேரம் குறையும்.

'999' '995' போன்ற எண்களை மனப்பாடம் செய்வதும் சுலபம். சிறார்களுக்கும் அதனைக் கற்றுக்கொடுப்பது எளிது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்