Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Infrared வெப்பமானிகள் உடல் வெப்பநிலையைச் சரியாகச் சோதிக்கின்றனவா?

உடல்வெப்பநிலைப் பரிசோதனை, COVID-19 கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஓர் இன்றியமையாத அங்கத்தை வகிக்கிறது. 

வாசிப்புநேரம் -
Infrared வெப்பமானிகள் உடல் வெப்பநிலையைச் சரியாகச் சோதிக்கின்றனவா?

படம்: Reuters

உடல்வெப்பநிலைப் பரிசோதனை, COVID-19 கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஓர் இன்றியமையாத அங்கத்தை வகிக்கிறது.

பள்ளிகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அன்றாடம் இருமுறை உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.

பல இடங்களில் Infrared வெப்பமானி பயன்படுத்தப்படுகிறது. தோலில் படாமல் வெப்பநிலையைக் கண்டறிகிறது கருவி.

ஆனால் மருத்துவமனைகளைத் தவிர மற்ற இடங்களில் வெப்பமானிகள் அடிக்கடி சரியான உடல்வெப்பநிலையைக் காட்டுவதில்லை.

Infrared வெப்பமானி தோலிலிருந்து வெளியாகும் வெப்பத்தை அளவிடுகிறது. ஆனால் அவற்றைத் தோலிலிருந்து அதிகத் தூரத்தில் வைத்திருந்தாலோ மிகவும் அருகில் வைத்திருந்தாலோ உடல் வெப்பநிலை சரியாகப் பதிவாகாது.

தூசு நிறைந்த இடங்களிலும் வெப்பநிலை சரியாகப் பதிவாகாது. காய்ச்சலுக்காக மருந்து எடுப்பவர்களின் வெப்பநிலையும் துல்லியமாகப் பதிவாகாது.

சில வேளைகளில் உடல்வெப்பநிலை அதிகமாகப் பதிவானவர்களுக்குக் காய்ச்சல் இருப்பது உறுதியில்லை. உடலை வருத்திடும் நடவடிக்கைளில் ஈடுபடுவது போன்றவை உடல் வெப்பநிலையை அதிகரிக்கலாம்.

ஆனாலும் உலகளவில் வெப்பமானிகளுக்கான பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. சரியான உடல் வெப்பநிலை எடுக்கப்படாததால் நோய்வாய்ப்பட்டவர்களையும் சரியாகக் கணிக்க முடிவதில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்