Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உடல் துர்நாற்றத்தை எப்படித் தவிர்ப்பது?

மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு உணவுப் பழக்களில் மாற்றங்களைச் செய்யலாம்.

வாசிப்புநேரம் -
உடல் துர்நாற்றத்தை எப்படித் தவிர்ப்பது?

(படம்: Pixabay)

உடல் துர்நாற்றம் ஏற்படுவதைச் சிலர் உணர்வதில்லை.

வெளியே செல்லும்போது பிறர் அதனை எப்படி அந்த நபரிடம் கூறுவது என்று சங்கடப்படுவதுண்டு.

சில வேளைகளில் முகத்துக்கு நேராகவும் கூறுவதுண்டு.

அப்படியொரு சூழலில் சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

உடல் துற்நாற்றத்துக்குத் தீர்வு உண்டா?

உண்டு என்கின்றனர் நிபுணர்கள்.

தோலில் உள்ள கிருமிகளிலிருந்து எப்படி துர்நாற்றம் கிளம்புகிறது என்பது தெரிந்தால் பிரச்சினைக்குத் தீர்வு தெரிந்துவிடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஆக்ஸ்ஃபர்ட், யார்க் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த குழுக்கள் இரண்டு அதன் தொடர்பிலான ஆய்வை மேற்கொண்டன.

வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்துக்கு உதவக்கூடிய டியோடரண்ட்டைக் (வாசனை திரவம்) கண்டுபிடிக்க அது வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.

தோலில் காணப்படும் இரு வகைச் சுரப்பிகளால் வியர்வை ஏற்படுகிறது.

 (படம்: Pixabay)

உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வியர்வை 'எக்ரின்' என்ற சுரப்பிவழி உருவாகிறது. 

இந்த வியர்வையால் துர்நாற்றம் கிளம்பாது.

அது உடல் சூட்டைத் தணிக்க உதவும் என நம்பப்படுகிறது.

குறிப்பிட்ட சில உடல் பகுதிகளிலும் சுரக்கும் 'அபோக்ரின்' என்ற சுரப்பிவழி ஏற்படும் வியர்வை துர்நாற்றத்தைக் கிளப்புகிறது.

அத்தகைய உடல் துர்நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்? 

(படம்: Pixabay)

  • எப்போதும் உடன் ஒரு டியோடிரண்டையோ வாசனைத் திரவத்தையோ வைத்துக்கொள்ளலாம்.
(படம்: Pixabay)

  • டிஷ்யு தாட்களை வைத்திருக்கவும்.

வியர்க்கும்போது உடனே துடைப்பது துர்நாற்றத்தைத் தவிர்க்க உதவும்.

(படம்: Pixabay)

  • வெயில் காலத்தில் பருத்தி ஆடைகளை அணியலாம்.
  • மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு உணவுப் பழக்களில் மாற்றங்களைச் செய்யலாம்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்