Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கொரோனா கிருமித்தொற்று: கவலை அளிக்கும் தகவல்களுக்கு இடையே, மனநலத்தை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது?

கொரோனா கிருமித்தொற்று குறித்த செய்திகள், தகவல்கள், பொய்த்தகவல்கள், ஆய்வுகள், சரிபார்க்கப்படாத விவரங்கள் என்று பல்வேறு தகவல்கள் அன்றாடம் நம் கைகளில் வந்து கொட்டுகின்றன.

வாசிப்புநேரம் -

'இந்த நாட்டில் இவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....'


'மாண்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது...'


'இந்த இடத்துக்குச் செல்லவேண்டாம்...அங்கு ஒருவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.'


இப்படி கொரோனா கிருமித்தொற்று குறித்த செய்திகள், தகவல்கள், பொய்த்தகவல்கள், ஆய்வுகள், சரிபார்க்கப்படாத விவரங்கள் என்று பல்வேறு தகவல்கள் அன்றாடம் நம் கைகளில் வந்து கொட்டுகின்றன.

எல்லாவற்றையும் நம்புவோரும் உண்டு, எதையும் நம்பாதோரும் உண்டு.

ஆனால் மொத்தத்தில் இவை சிலரது மனநிலையைக் கடுமையாகப் பாதிக்கலாம்.

COVID-19 கிருமித்தொற்று பற்றிய செய்தியை நாடாதவர்களையும், அந்தத் தகவல்கள் எப்படியோ எட்டிவிடுகின்றன.

இந்தக் காலக்கட்டத்தில் மக்கள் தங்கள் மனநலனை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்? BBC செய்தி நிறுவனம் நிபுணர்களிடம் கேட்டறிந்து, அது குறித்த குறிப்புகளை வழங்கியுள்ளது.

  • மனநிலையை மோசமடையச் செய்யும் தகவல்களைப் படிக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்துவது. அவற்றைப் படிப்பதற்காகக் குறிப்பிட்ட நேரத்தை மட்டும் ஒதுக்குவது.
  •  நம்பகமான செய்திகளை மட்டுமே நாடுவது. கைக்கு எட்டும் தகவல்களைப் படிப்பதைத் தவிர்ப்பது.
  • சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்வது.
  • சமூக ஊடங்களில், மனநிலையை மோசமடையச் செய்யும் தகவல்களை வெளியிடுவோரின் கணக்குகளைத் தொடராமல் (follow) இருப்பது.
  • கொரோனா கிருமித்தொற்று # குறியீடு கொண்ட பதிவுகளையும் தொடராமல் இருப்பது.
  • மற்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது.
  • கவலை அளிக்கும் செய்திகளைப் பகிரும் WhatsApp உரையாடல் குழுக்களிலிருந்து வெளியேறுவது.
  • வீட்டிலேயே தங்கியிருக்கும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு அவ்வப்போது காணொளி அழைப்பு செய்து பேசுவது.
  • புதிய திறனைக் கற்றுக்கொள்வது.
  • இதுவரை செய்யமுடியவில்லையே என்று ஏங்கிய சில நடவடிக்கைகளை இப்போது செய்வது.
  • வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்துக்கொள்வது.
  • சூரிய வெளிச்சத்தை அவ்வப்போது பெறுவது.
  • உடற்பயிற்சி செய்வது.
  • உரிய நேரத்தில் உணவு உண்பது.

இப்படி சொந்தமாக நம்மைக் கட்டுப்படுத்திக்கொள்வதன் மூலம் மனநலன் பாதிக்காமல் இருப்பதைப் பார்த்துக்கொள்ள முடியும் என்று BBC செய்தி குறிப்பிடுகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்