Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

செயலிகளைப் (Apps) பதிவிறக்கம் செய்யும் முன் இவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள்

நம் அனைவரது கையிலும் கைத்தொலைபேசி.

வாசிப்புநேரம் -
செயலிகளைப் (Apps) பதிவிறக்கம் செய்யும் முன் இவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள்

( படம்: AFP )

நம் அனைவரது கையிலும் கைத்தொலைபேசி.

தொடர்பு, தகவல், நாள்காட்டி, கடிகாரம், திட்டமிடல், குறிப்பு என்று அனைத்தும் கைத்தொலைபேசியில்!

இதனால் ஆயிரமாயிரம் புதுப்புதுச் செயலிகள் அன்றாடம் அறிமுகமாகின்றன.

நம்மில் பலர், எது தேவை என்று நினைக்கிறோமோ அதை உடனடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்கிறோம்.

அதில் என்னென்ன பாதுகாப்புச் சிக்கல்கள் இருக்கின்றன?

செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் முன் இவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்!

  •  உங்கள் கைத்தொலைபேசியின் இயங்கு தளம் (Operating System) ஆக அண்மைப் பதிப்பு (Update) என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
  • ஆக அண்மைப் பதிப்பாக இருந்தால் அது உங்கள் கைத்தொலைபேசியை ஆக அண்மைக் கேடுகளிலிருந்து பாதுகாக்க வாய்ப்பிருக்கிறது.
  • செயலி உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கேட்கிறதா? அதை எதற்காகக் கேட்கிறது என்று ஆராயுங்கள். சம்பந்தமில்லாத தகவல்களை அது கேட்டால், அந்தச் செயலியைத் தவிர்த்துவிடுங்கள்.
  • செயலி நம்பகமான நிறுவனத்தின் செயலியா என்பதை ஆராயுங்கள். சந்தேகமிருந்தால், நிறுவனத்தின் இணையத்தளத்துக்குச் சென்று, அதைச் சற்று ஆராய்ச்சி செய்துபாருங்கள்.
  • செயலியைப் பற்றிய கருத்துகளைப் படியுங்கள். அவை நம்பகமாக இருக்கின்றனவா...வேண்டுமென்று எழுதப்பட்டவையா என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.
  • செயலியைப் பதிவிறக்கம் செய்தவுடன் அதில் உள்ள 'Privacy Settings' அங்கத்துக்குச் சென்று, அதை மறு ஆய்வு செய்யுங்கள். சில செயலிகளில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை எடுத்துக்கொள்ள அது அனுமதி அளித்திருக்கும். நீங்கள் அதை நீக்கலாம்.
  • உங்களுக்குச் சந்தேகம் எழுந்தாலோ, நெருடலாக இருந்தாலோ ஒருபோதும் செயலியைப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்.
  • குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை உங்கள் செயலிகளை மறு ஆய்வு செய்யுங்கள். வேண்டாதவற்றை நீக்குங்கள்.
  • தவறான செயலிகள் உங்கள் கைத்தொலைபேசியின் முக்கிய கூறுகளைக் கெடுத்து, உங்களிடமிருந்து பல தகவல்களைக் களவாட வாய்ப்பிருக்கிறது. ஆகவே எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்