Images
  • calls block
    (படம்:Pixabay)

உங்கள் அழைப்பையோ தொடர்பையோ ஒருவர் விரும்பவில்லை...எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

உங்கள் அழைப்பை யாரேனும் தடுக்கிறார்களா என்று எப்படித் தெரிந்துகொள்வது?

1. குரல் பதிவு செய்யுமாறு கேட்கும் முன் எத்தனை முறை தொலைபேசி அழைப்பு ஒலி ஒலிக்கிறது என்பதைக் கவனியுங்கள்.

தொலைபேசி வழி அழைக்கும்போது மறுமுனையில் இருப்பவர் நீண்ட நேரத்திற்குப் பின்னும் பேசவில்லையேல் குரல் பதிவு செய்யுமாறு கூறப்படும்.

ஒரே அழைப்பு ஒலிக்குப் பின் இவ்வாறு கேட்கப்பட்டால் மறுமுனையில் இருப்பவர் உங்கள் தொலைபேசி எண்ணுக்குத் தடை விதித்திருக்கலாம். 

2. உங்களுடைய தொலைபேசி எண்ணுக்குத் தடை விதித்ததாக நீங்கள் நினைப்பவரின் எண்ணை வேறு ஒரு தொலைபேசி எண் வழி தொடர்புகொள்ளுங்கள்.


தங்கள் சமூக ஊடக கணக்கைப் பார்க்கமுடியாதபடி ஒருவர் உங்களுக்குத் தடை விதித்திருக்கிறாரா என்பதை எவ்வாறு அறியலாம்?

1. Facebook

Facebook வழியாக அந்த நபருடன் மேற்கொண்ட உரையாடலைக் கண்டுபிடியுங்கள்.  நபரின் பெயர் தடித்த எழுத்துகளில் இருந்தால் அவர் உங்களுக்குத் தடை விதித்திருக்கலாம். 

அந்த உரையாடலில் வேறு தகவல்கள் அனுப்ப இயலாது. 

2. Instagram

நபரின் Instagram கணக்கைத் தேடிப் பாருங்கள். அந்தக் கணக்கைப் பின்தொடரும் ('follow') குறியீடு அகற்றப்பட்டிருந்தால், நீங்கள் தடை செய்யப்பட்டுள்ளீர்கள். 

3. WhatsApp

WhatsAppஇல் தடை விதிக்கப்பட்டால் அந்த நபருடைய பெயருக்கு அருகில் இருக்கும் படத்தை உங்களால் காணமுடியாது. 

அவர்களுக்குத் தகவல் அனுப்பும்போது ஒரு புட்குறி மட்டுமே இருக்கும். அது நீல நிறமாக மாறாது. 

Whatsapp வழி அழைக்க முயன்றால் அழைப்பு துண்டிக்கப்படும்.

 

Top