Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

திறன்பேசிகளின் ஆயுளைக் கூட்டலாம்...இப்படி!

திறன்பேசிகள் மெதுவடைந்தாலோ அதன் மின்கலன் மோசமாகிவிட்டாலோ பலரும் புதிய திறன்பேசி ஒன்றை வாங்க முடிவெடுப்பார்கள்.

வாசிப்புநேரம் -

திறன்பேசிகள் மெதுவடைந்தாலோ அதன் மின்கலன் மோசமாகிவிட்டாலோ பலரும் புதிய திறன்பேசி ஒன்றை வாங்க முடிவெடுப்பார்கள்.

ஆனால், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மின்னியல் சாதனங்களின் வாழ்நாளை நீட்டிக்கலாம்.

தேவைப்பட்டால் மின்கலனை மாற்றுவது....

திறன்பேசி மின்கலன்கள் குறிப்பிட்ட முறை மட்டுமே மின் ஏற்றம் செய்ய உகந்தவை. அதன் பின், மின்கலன் படிப்படியாக அதன் திறனை இழக்கும். 

சுத்தம் செய்வது....

மின்னியல் சாதனங்களில் உள்ள அழுக்கு அவற்றை அளவுக்கு அதிகமாகச் சூடாக்கக்கூடும். அதனால், அவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

தேவை இல்லாத தகவல்களை அழிப்பது....

மின்னியல் சாதனங்களில் நிறைய தகவல்களைச் சேமித்து வைத்தால், அது சாதனத்தின் வேகத்தைப் பாதிக்க வாய்ப்புண்டு.
அதனால், ஆண்டுக்கு ஒரு முறையாவது தேவை இல்லாததை மின்னியல் சாதனத்திலிருந்து நீக்குவது நல்லது.

பாதுகாப்பது....

உறை, திரை பாதுகாப்பு ஆகியவற்றில் கவனமாக இருக்கவேண்டும். அதன் மூலம் மின்சாதனங்களில் கீறல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

பழுதுபார்ப்பது…

இவை அனைத்தும் உதவவில்லை என்றால், மின்சாதனங்களைப் பழுது பார்க்கலாம்.

புதிதாக ஒரு கருவியை வாங்குவதைவிடப் பழுதுபார்க்க முடியுமா என்று முதலில் ஆராய்வது சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்