Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஹைட்ரஜனால் இயக்கப்படும் கார் - ஹியுண்டாய் வெளியீடு

எரிபொருள் சில்லால் இயக்கப்படும் வாகனத்தை ஹியுண்டாய் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

வாசிப்புநேரம் -
ஹைட்ரஜனால் இயக்கப்படும் கார் - ஹியுண்டாய் வெளியீடு

(படம்: AFP/Rob Lever)


எரிபொருள் சில்லால் இயக்கப்படும் வாகனத்தை ஹியுண்டாய் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

அந்தத் தென் கொரிய உற்பத்தி நிறுவனம், பயனீட்டாளர் மின்னியல் காட்சியில் Nexo வாகனத்தை அறிமுகம் செய்தது.

அது பயனீட்டாளர்களின் குரலை அடையாளம் கண்டு இயங்கும் ஆற்றல் உடையது என்று கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவைக் கொண்ட அந்தக் கார், தானாக இயங்கக்கூடியது என்றும் ஹியூண்டாய் கூறியது.

ஆயினும், ஹைட்ரஜன் நிலையங்கள் அவ்வளவு இல்லாததால் அந்த வகைக் கார்கள் தற்போதைக்குப் பெருமளவில் விற்பனைக்கு வரமாட்டா என்று கருதப்படுகிறது.
வருங்காலத்தில் நிலைமை மாறலாம்... 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்