Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மீண்டும் வந்துவிட்டார் இந்தியன் தாத்தா

இந்தியன் திரைப்படம் 1996இல் முதலில் வெளிவந்த போது அதில் இந்தியன் தாத்தாவின் கையைச் சுழற்றும் வர்மக் கலையைச் சொந்தமாகச் செய்து பார்த்தவர்கள் பலர். 23 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரசிகர்களைக் கவர வந்துள்ளார் இந்தியன் தாத்தா.

வாசிப்புநேரம் -
மீண்டும் வந்துவிட்டார் இந்தியன் தாத்தா

படம்: Lyca Productions

இந்தியன் திரைப்படம் 1996இல் முதலில் வெளிவந்த போது அதில் இந்தியன் தாத்தாவின் கையைச் சுழற்றும் வர்மக் கலையைச் சொந்தமாகச் செய்து பார்த்தவர்கள் பலர். 23 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரசிகர்களைக் கவர வந்துள்ளார் இந்தியன் தாத்தா.

இந்தியன் 2 படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான Lyca Productions.

படப்பிடிப்புப் பணிகள் நேற்று (ஜனவரி 18) தொடங்கின.

ஷங்கரின் இயக்கத்தில், அனிருத்தின் இசையமைப்பில் உருவாகிறது படம். அதைக் குறித்து அனிருத்தும் தம் Instagram பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

படத்தின் கதாநாயகி காஜல் அகர்வால்.

ஒப்பனையின் மூலம் அசல் வயதானவர் போலத் தோற்றமளித்த கமல்ஹாசனின் கதாபாத்திரம் தமிழ்த் திரையுலகில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்