Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

புத்தாக்கத்தின் வழி நீடித்து நிலைக்கும் முயற்சியில் ‘பாதிக்’

இந்தோனேசியாவில் பெயர்பெற்றது ‘பாதிக்’துணி வடிவமைப்பு. இந்தோனேசியர்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக அது திகழ்கிறது.

வாசிப்புநேரம் -
புத்தாக்கத்தின் வழி நீடித்து நிலைக்கும் முயற்சியில் ‘பாதிக்’

படம்: Timothy de Souza

இந்தோனேசியாவில் பெயர்பெற்றது ‘பாதிக்’துணி வடிவமைப்பு. இந்தோனேசியர்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக அது திகழ்கிறது.

ஒவ்வொரு பாதிக் வடிவமைப்பிற்கும் ஓர் அர்த்தம் உண்டு. அதன் பின்னணியில் ஒரு கதையும் உண்டு.  காலங்காலமாக அந்த வடிவமைப்புகளை அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்றுள்ளனர் அக்கலையில் கரைகண்டவர்கள்.

படம்: Jack Board

பாரம்பரிய பாதிக் கலை 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. நுணுக்கமான முறையில் துணியில் பாதிக் வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன. பல்வேறு வண்ணங்களைப் பயன்படுத்தி அவை தயாரிக்கப்படுகின்றன.

ஆடை வடிவமைப்பு நூற்றாண்டுகள் தாண்டியும் அதே அளவு பிரபலமாக இருப்பது அரிது. ஆனால் "பாதிக்" காலத்தை வென்ற வடிவமைப்பாகக் கருதப்படுகிறது.

இன்றைய நவீன காலத்திலும் பாதிக் துணிகளைப் பலதரப்பட்ட மக்களும் விரும்பி அணிகின்றனர். அவற்றைத் தயாரிக்கும் கலைஞர்களும் காலத்திற்கு ஏற்றவாறு தங்களின் வடிவமைப்புகளில் புதுமையைப் புகுத்தி வருகின்றனர்.

வெளிநாட்டு வாடிக்கையாளர்களை ஈர்ப்பது அவர்களின் எண்ணம்.

ஒருசிலரோ இயற்கையைச் சார்ந்த முறைகளைப் பயன்படுத்தி எதிர்காலத்திற்கு உகந்த வகையில் துணிகளைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்