Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வண்டு பர்கர் உண்ணத் தயாரா?

ஜெர்மனியின் ஆகப் பெரிய வேளாண், உணவு நிகழ்ச்சி, பெர்லின் நகரில் தொடங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -

ஜெர்மனியின் ஆகப் பெரிய வேளாண், உணவு நிகழ்ச்சி, பெர்லின் நகரில் தொடங்கியுள்ளது.

66 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், அதில் தங்கள் பொருட்களை காட்சிக்கு வைக்கின்றனர்.

அதில் ஓர் உணவுப் பொருள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புழுக்களால் செய்யப்பட்ட பர்கர்.

நெதர்லந்தில் தயாரிக்கப்பட்ட இந்த பர்கர் விரைவில் ஜெர்மானியப் பேரங்காடிகளில் விற்பனைக்கு வரக்கூடும்.

பர்கரின் சுவை, வழக்கமான பர்கரில் இருந்து பெரிதும் வேறுபடவில்லை என்று அதைச் சுவைத்தவர்கள் கூறியுள்ளனர்.

ஆடு, மாடு, கோழி, இறைச்சி பர்கர்களைத் தயாரிப்பதை விடப் புழுக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பர்கர் சுற்றுச்சூழலுக்கு உகந்தது எனக் கூறப்படுகிறது.

புழுக்களுக்குக் குறைவான தண்ணீரும் தீனியும் போதும்.

புழு பர்கர் தயாரிப்பின்போது குறைவான வெப்ப வாயுக்களே வெளியிடப்படுகின்றன.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்