வேலை நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் போது உங்களிடம் இருக்க வேண்டியவை
நேர்முகத் தேர்வைப் பற்றி தகவல் தெரிந்துகொள்ளும்போதே நிறுவனத்தின் தொடர்பு எண்ணை கைபேசியில் பதிவு செய்துகொள்ளுங்கள்.
வேலை கிடைப்பது சிரமம், அதிலும் பிடித்த வேலை கிடைப்பது இன்னும் சிரமம். போட்டித்தன்மைமிக்க சூழலில், நேர்முகத் தேர்வில் சிறப்பாகச் செய்வது மிக முக்கியம். ஒரு வேலைக்கு விண்ணப்பம் செய்யும் பலருக்கு மத்தியில், நீங்கள் தனித்து அடையாளம் காணப்பட சில குறிப்புகள்:
நிறுவனத்தின் தொலைபேசி எண்
நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் போது நேரத்தோடு செல்வது முக்கியம். ஆனால் சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காத வகையில் சில தடங்கல்கள் எற்பட்டுத் தாமதமாகலாம்.
அவ்வாறு நேரிடும் தருணத்தில் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் நிறுவனத்திற்கு தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு தாமதத்தைப் பற்றித் தெரிவிக்க வேண்டும். நேர்முகத் தேர்வைப் பற்றி தகவல் தெரிந்துகொள்ளும்போதே நிறுவனத்தின் தொடர்பு எண்ணை கைபேசியில் பதிவு செய்துகொள்ளுங்கள்.
கேள்விகள் அடங்கிய புத்தகம்
நேர்முகத் தேர்வின் இறுதியில் உங்களுக்குக் கேள்விகள் ஏதேனும் உண்டா என்று நேர்முகத் தேர்வை நடத்துபவர் கேட்பார்.
அதற்கு எப்போதும் "ஆமாம்" என்று பதில் கூறுங்கள்.
அதுவேலைக்கான உங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தும். அதனால் ஒரு புத்தகத்தில் வேலை தொடர்பான சில கேள்விகளை முன்கூட்டியே தயார் செய்து கொள்ளுங்கள். கேட்டவுடன் துல்லியமாகக் கேள்வி கேட்கும் உங்கள் போக்கு நேர்முகத் தேர்வை நடத்துபவரின் மனத்தில் பதியும்.
பேனா
பேனா... அது போன்ற சக்திவாய்ந்த ஆயுதமில்லை. நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் போது கட்டாயமாக நன்கு எழுதும் பேனாவை எடுத்துச் செல்லுங்கள்.
முக்கியமான தகவல்களையும் நீங்கள் பிறகு கேட்கவிருக்கும் கேள்விகளையும் எழுதிக் கொள்ள அது உதவும்.