Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

80 ஆண்டுகளில் மறையவிருக்கும் 5 தீவுகள்

தெற்கு பசிஃபிக் பகுதியில் சுமார் 1,000 தீவுகள் சாலமன் தீவுகளில் அடங்கும். 1993இலிருந்து அங்கு நீர்மட்டம் 8 மில்லிமீட்டர் அதிகரித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
80 ஆண்டுகளில் மறையவிருக்கும் 5 தீவுகள்

படம்: Pixabay

1) சாலமன் தீவுகள்

தெற்கு பசிஃபிக் பகுதியில் சுமார் 1,000 தீவுகள் சாலமன் தீவுகளில் அடங்கும். 1993இலிருந்து அங்கு நீர்மட்டம் 8 மில்லிமீட்டர் அதிகரித்துள்ளது. வெகுவாக அதிகரிக்கும் நீர்மட்டத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க புதிய நகரம் ஒன்று கட்டப்படுகிறது. 1935லிருந்து அங்குள்ள சில தீவுகளில் கிராமங்களும் அதிகரிக்கும் நீர்மட்டத்தினால் அழிந்துள்ளன.

2) மாலத்தீவுகள்

பல சொகுசு ஹோட்டல்களைக் கொண்ட பிரபல சுற்றுலாத் தலம் மாலத்தீவு. தாழ்வாக அமைந்துள்ள தீவின் நிலப்பரப்பு கடலுக்கு அடியில் மூழ்கி வருகிறது. உலக வங்கியின் கணிப்பின்படி 2100க்குள் அந்நாடு கடலுக்கு அடியில் இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

3) ஃபிஜி

ஃபிஜியின் தீவுகளும் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. பருவநிலை மாற்றத்தினால் அதிகரிக்கும் நீர்மட்டம் அங்குள்ள கிராமவாசிகளை அச்சுறுத்துகிறது. நீர்மட்டம் 2050க்குள் 43 செண்டிமீட்டர் உயரும் என்று அறிக்கைகள் கூறுகின்றன. அங்குள்ள பவளப்பாறைகள் வெளுத்து, நோய்க்கு ஆளாகும் நிலைமையில் உள்ளன.

4) சேஷெல்ஸ்

ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள சேஷெல்ஸ் (Seychelles) தீவு வரலாறு காணாத மாற்றங்களை எதிர்நோக்குகிறது. நாட்டின் 85 விழுக்காட்டு வளங்கள் கரையோரமாக அமைந்துள்ளதால் அதிகரிக்கும் நீர்மட்டம் அபாயகரமானது. ஒரு மீட்டர் நீர்மட்டம் அதிகரித்தாலும் கூட அங்கு 70 விழுக்காட்டு நிலப்பகுதி அழிந்துவிடும்.

5) ஷிஷ்மரெஃப்

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் ஒரு பகுதி ஷிஷ்மரெஃப் தீவு. சுமார் 650 பேர் வசிக்கும் இவ்விடம் கடந்த 50 ஆண்டுகளாக நீருக்கு அடியில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. 1997லிருந்து 100 அடி நிலப்பரப்பு குறைந்துள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் தீவு முற்றிலும் கடலுக்கு அடியில் இருக்கும் என்று நம்பப்படுகிறது. அங்கு வசிப்பவர்கள் தீவிலிருந்து வெளியேற வாக்களித்தாலும் நிதிப் பற்றக்குறையினால் குடிபெயர அவர்கள் சிரமப்படுகின்றனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்