Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நேர மாற்றத்தால் பயணக் களைப்பா?போக்குவதற்குப் புது வசதி

நேர மாற்றத்தால் பயணக் களைப்பா?போக்குவதற்குப் புது வசதி

வாசிப்புநேரம் -
நேர மாற்றத்தால் பயணக் களைப்பா?போக்குவதற்குப் புது வசதி

(படம்: Bloomberg)

கை கால்களை முறுக்கி, இளைப்பாற ஓர் அருமையான இடம்; இதமான குளியல்; நல்ல இசை; மனத்துக்கு அமைதியளிக்கும் சூழல்.

இவையெல்லாம் புது யுக நீராவிக் குளியலிடத்தில் என்று தானே நினைத்தீர்கள்? அது தான் இல்லை.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகர விமான நிலையத்தில், குவாண்டாஸ் ஏர்வேஸ் அமைத்திருக்கும் அனைத்துலகப் பயணிகளுக்கான இளைப்பாறும் இடத்தில்.

எதற்காக இவ்வளவு சொகுசான இடம்? நேர மாற்றத்தால் ஏற்படும் பயணக் களைப்பைப் போக்குவதற்கு.

சென்ற மார்ச் மாதம், குவாண்டாஸ் விமான நிறுவனம், பெர்த் நகரிலிருந்து லண்டன் நகருக்கு இடைவிடாச் சேவையை அறிமுகம் செய்தது.

உலகில் ஆக நீளமான விமானச் சேவைகளுள் அதுவும் ஒன்று. பயண நேரம் 17 மணி நேரம், 20 நிமிடங்கள்.

தொலைவில் இருக்கும் இரு நகரங்களை இணைக்கும் இடைவிடா விமானச் சேவைகள் அதிகரித்துவருவதையடுத்து, பயணிகளின் களைப்பைப் போக்கும் இத்தகைய சேவைகளை வழங்குவதில் விமான நிறுவனங்கள் மும்முரமாக இறங்கியுள்ளன.

இருப்பினும், நேர மாற்றத்தால் ஏற்படும் களைப்புப் போக, எப்படியும் ஒரு நாளெடுக்கும் என்கின்றனர் பயணிகள்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்