Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

குடி குடியைக் கெடுக்கும்

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்(Johnny Depp), தயாரிப்பு, இசை ஆகிய துறைகளிலும் தடம்பதித்தவர். சிறந்த நடிகருக்கான அங்கீகாரங்களைப் பெற்றவர்.

வாசிப்புநேரம் -
குடி குடியைக் கெடுக்கும்

படம்: Pixabay

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்(Johnny Depp), தயாரிப்பு, இசை ஆகிய துறைகளிலும் தடம்பதித்தவர். சிறந்த நடிகருக்கான அங்கீகாரங்களைப் பெற்றவர்.

பதின்ம வயதில் 21 Jump Street எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்துப் புகழடைந்த டெப், 30 ஆண்டுக்கும் மேலாக திரைத் துறையில் ஈடுபட்டுவருபவர்.

அண்மையில் Rolling Stone சஞ்சிகைக்கு அளித்த நேர்காணலில், ஒயின் பானத்துக்காக ஒவ்வொரு மாதமும் 30ஆயிரம் டாலர் செலவுசெய்வதாக அவர் குறிப்பிட்டார்.

தமது 30ஆண்டுக் கலை வாழ்க்கையில் சுமார் 650 மில்லியன் டாலரை ஈட்டியதாகவும், ஆனால் அதில் பெரும்பகுதியைச் செலவழித்துவிட்டதாகவும் டெப் கூறினார்.

தற்போது அவர் நிதி நெருக்கடியால் சிரமப்படுவதாய்த் தகவல்கள் கூறின. 2012ஆம் ஆண்டு கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகம், ஆக அதிகச் சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலில் டெப்பையும் சேர்த்திருந்தது.

2015ஆம் ஆண்டு, டிஸ்னி லெஜண்ட் விருது (Disney Legend Award) அவருக்கு வழங்கப்பட்டது. வால்ட் டிஸ்னி நிறுவனத்துக்கு மிகப் பெரிய அளவில் பங்களித்தோரைக் கௌரவிக்கும் விருது அது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்