Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

படப்பிடிப்பின்போது பாவனைப் பொருளாகப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியால் மாண்ட பாடகர்

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் பிரபலப் பாடகர் ஜஸ்டின் கார்ட்டர் தமது இசைக் காணொளிக்கான படப்பிடிப்பின்போது எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானார்.   

வாசிப்புநேரம் -
படப்பிடிப்பின்போது பாவனைப் பொருளாகப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியால் மாண்ட பாடகர்

படம்: Facebook/Justin Carter

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் பிரபலப் பாடகர் ஜஸ்டின் கார்ட்டர் தமது இசைக் காணொளிக்கான படப்பிடிப்பின்போது எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானார்.

மார்ச் 16 - ஆம் தேதி சனிக்கிழமை நடந்த படப்பிடிப்பின்போது 35 வயது திரு ஜஸ்டின் துப்பாக்கியை பாவனைப் பொருளாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

அது தவறுதலாக வெடித்ததில் அவர் மரணமடைந்தார் என்று நிர்வாகக்குழு உறுதிப்படுத்தியது.

அவரின் மரணம் பற்றி மார்ச் 21-ஆம் தேதி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களில் 5 காணொளிகளை வெளியிட்ட பாடகர் கார்ட்டரின் ஆகக் கடைசித் தயாரிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.
   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்