Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

சமைத்துப் பாருங்கள் - "காய்கறி ரவா கிச்சடி"

மதிய வேளையில் சுவைக்க இரு சிறந்த சிற்றுண்டி. நல்ல இரவு நேர சாப்படும் கூட. நிறைய காய்கறிகள் இருப்பதால் சிறுவர்களுக்கு நல்ல சத்தான உணவு.

வாசிப்புநேரம் -

காய்கறி ரவா கிச்சடி

தேவையானவை

ரவை - 1 1/2 கப்

வெங்காயம் - 1/2

தக்காளி - 1/2

பச்சை மிளகாய் - 4

கறிவேப்பிலை -சிறிது

புதினா - 1/4 கப்

கேரட் - 1

உருளைகிழங்கு - 1

காளிஃப்ளவர் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

பட்டாணி - 1/2 கப்

(காய்களை சிறியதாக நறுக்கி வைக்கவும்)

அரைக்க

இஞ்சி - சிறிய துண்டு

பூண்டு - 3 பல்

சோம்பு - 1/2 டீஸ்பூன்

கிராம்பு - 1

பட்டை - 1

கடுகு

கடலைப்பருப்பு

உளுந்தம்பருப்பு

பிரியாணி இலை - சிறிது


செய்முறை

கடாயில் (சீன சட்டி) எண்ணெய் விட்டு ரவையை நன்கு வறுத்து எடுக்கவும்.அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாக போடவும்.

பிறகு அதில் வெங்காயம், மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.தக்காளி சேர்த்து வதக்கவும்.

பிறகு அத்துடன் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.அதில் காய்கள், மஞ்சள்தூள் மற்றும் புதினா சேர்த்து வதக்கி 4 கப் தண்ணீர், மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்ததும், ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி தட்டாமல் கிளறி விடவும்.மூடி போட்டு சிறுதீயில் வைத்து 5 நிமிடம் வரை புளுங்க விடவும்.

காய்கறி ரவா கிச்சடி தயார். இதை தேங்காய் சட்டினியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்