Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

எளிதில் சமைக்கக்கூடிய "மசாலா உருளைக்கிழங்கு"

உருளைக்கிழங்கு சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் ஒன்று. எளிதில் சுவையான இந்தப் பதார்த்தத்தை தயார் செய்ய முடியும்

வாசிப்புநேரம் -

மசாலா உருளைக்கிழங்கு


உருளைக்கிழங்கு சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் ஒன்று. எளிதில் சுவையான இந்தப் பதார்த்தத்தை தயார் செய்ய முடியும்


தேவையானப் பொருட்கள்
உருளைக்கிழங்கு - ஒன்று
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
வரமிளகாய் - 2
வெங்காயம் - ஒன்று
தக்காளி - சிறியது ஒன்று
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித் தழை - சிறிதளவு


செய்யும் முறை
1) உருளைக்கிழங்கை சிறிய சதுரமாக நறுக்கி மூழ்குமளவு தண்ணீரும் சிறிது உப்பும் சேர்த்து முக்கால் பாகம் வேக வைத்து தண்ணீர் வடித்து எடுத்து வைக்கவும்.
2) வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
3) வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சோம்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் தாளிக்கவும். அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4) வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் மஞ்சள் தூளும் சேர்த்து வதக்கவும்.
5) அதன் பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கை போட்டு தேவைப்பட்டால் உப்பும் சேர்த்து கிளறி மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.
6) கிழங்கு மசாலாவுடன் சேர்ந்து நன்கு வெந்ததும் மல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான உருளைக்கிழங்கு மசாலா தயார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்