Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மீன் கட்லட் செய்வது எப்படி?

மீன் கட்லட் அனைவரும் மிகவும் விரும்பிச் சாப்பிடும் பதார்த்தம். 

வாசிப்புநேரம் -
மீன் கட்லட் செய்வது எப்படி?

மீன் கட்லட்

மீன் கட்லட் அனைவரும் மிகவும் விரும்பிச் சாப்பிடும் பதார்த்தம். சில சமயங்களில் குழந்தைகள் மீன் சாப்பிட மறுப்பார்கள். அத்தகையோருக்கு மீன் கட்லட் செய்து கொடுத்தால் நிச்சயம் விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருட்கள்

* மீன் – 1/2 கிலோ

* உருளைக்கிழங்கு – 2

* சின்ன வெங்காயம் – 100 கிராம்

* பச்சைமிளகாய் – 5

* சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்

* மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்

* மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்

* இஞ்சி,பூண்டுவிழுது – 1/4 ஸ்பூன்

* மல்லி இலை – 1 கொத்து

* புதினா இலை - 1 கொத்து

* பிரெட் கிரம்ப்ஸ் – 4

* முட்டை – 4

* எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்

* உப்பு – தேவையான அளவு

* எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

* மீன் மற்றும் உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.

* வாணலியில் சிறிது எண்ணெயை விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, மல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை வதக்கி மீன் கலவையில் சேர்க்கவும்.

* அத்துடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

* மு‌ட்டையின் வெள்ளைக் கருவை ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் ஊ‌ற்‌றி ந‌ன்கு அடி‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

* ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு நன்கு காய்ந்ததும் மீன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக  நமக்கு பிடித்த வடிவில் தட்டி, முட்டையில்  தோய்த்து பிரெட் தூளில் புரட்டி பொரித்தெடுக்கவும்.

மீன் கட்லெட்டை டொமேட்டோ சாஸ் அல்லது புதினா சட்னியுடன் சாப்பிடலாம்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்