Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கேரட் மில்க் ஷேக்

தேவையான பொருள்கள்: கேரட் - 2

வாசிப்புநேரம் -
கேரட் மில்க் ஷேக்

கேரட் மில்க் ஷேக்

தேவையான பொருள்கள்:

கேரட் - 2

பால் - ஒரு டம்ளர்

பொடித்த சீனி - ஒன்றரை மேசைக்கரண்டி

வெனிலா ஐஸ்கிரீம் - 2 மேசைக்கரண்டி

பாதாம் - 4

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

ஐஸ் கட்டிகள் - 2

 

செய்யும் முறை:

1.) முதலில், காரட்டைத் துருவி தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

பாதாமை தோல் நீக்கி சில மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். சிறிது காரட் துருவலையும், பாதாமையும் அலங்கரிப்பதற்காக தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

2.) மிக்ஸியில் வேக வைத்த கேரட் துருவலுடன், தோல் நீக்கிய பாதாம், சிறிது பால் சேர்த்து  அரைக்கவும்.

3.) அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் மீதமுள்ள பால், ஐஸ்க்ரீம், ஐஸ் கட்டிகள், பொடித்த சீனி அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.

4.) பரிமாற போகும் க்ளாஸில் மில்க் ஷேக்கினை ஊற்றி, தனியாக எடுத்து வைத்துள்ள கேரட் துருவல் மற்றும் பாதாமை தூவி அதனுடன் குங்கும்ப்பூவும் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்