Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி?

இந்த சமையல் குறிப்பை அனுப்பி வைத்தவர் கிம் மோவைச் சேர்ந்த மஞ்சுளா குமார். நீங்களும் உங்கள் சமையல் குறிப்புகளை எங்கள் இணைய வாசலுக்கு உங்கள் படத்துடன் அனுப்பி வைக்கலாம். அதற்"தொடர்பு கொள்ள" என்ற பகுதிக்குச் சென்று பதிவேற்றம் செய்யவூம். அல்லது 63503616 என்ற தொலைபேசி எண்ணில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

வாசிப்புநேரம் -
கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி?

கோபி மஞ்சூரியன்

இந்த சமையல் குறிப்பை அனுப்பி வைத்தவர் கிம் மோவைச் சேர்ந்த மஞ்சுளா குமார். நீங்களும் உங்கள் சமையல் குறிப்புகளை எங்கள் இணைய வாசல் மூலம் மற்ற வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் உங்கள் நிழல்படத்துடன் அனுப்பி வைக்கவும். அதற்கு "தொடர்பு கொள்ள" என்ற பகுதிக்குச் சென்று பதிவேற்றம் செய்யவும். அல்லது 63503616 என்ற தொலைபேசி எண்ணில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.


கோபி மஞ்சூரியன்

தேவையான பொருள்கள்:

காலிஃபளவர் - 1

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

முட்டை - 1

கான் ஃப்ளார் – 25 கிராம்

மைதா மாவு – 50 கிராம்

தக்காளி சாஸ் – கால் கப்

சோயா சாஸ் – ஒரு மேசைக்கரண்டி

அஜினாமோட்டோ – 2 சிட்டிகை (தேவைப்பட்டால்)

மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி

எண்ணெய் – அரை லிட்டர்

உப்பு – கால் தேக்கரண்டி

கொத்தமல்லி – ஒரு கொத்து

செய்யும் முறை: 

1.) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து முழு காலிஃபிளவரை அதில் போட்டு 5 நிமிடம் கழித்து எடுக்கவும். முட்டைகோஸை நறுக்கி துண்டுகளாக போட்டால் மேலே உள்ள பூ உதிர்ந்து விடும்.

2.) காலிஃபிளவரை  எடுத்து கீழே சற்று தடிமனாக உள்ள பகுதியை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

3.) ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, முட்டை அடிக்கும் கருவியால் நன்கு அடித்து கலக்கிக் கொள்ளவும்.

4.) மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன் ஃபளார், அஜினோமோட்டோ, உப்பு கால் தேக்கரண்டி மற்றும் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

5.) வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்திருக்கும் காலிஃபிளவரை  முதலில் அடித்து வைத்துள்ள முட்டை கருவில் தோய்த்து எடுத்து, பிறகு கரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.

6.) சுமார் 5 நிமிடம் கழித்து காலிஃபிளவர் லைட் பிரெளன் ஆனதும் எடுத்து விடவும்.

7.) பின்னர் வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

8.) பின்னர் அதனுடன் பொடியாய் நறுக்கின பச்சை மிளகாய், சோயா சாஸ் சேர்த்து கிளறவும்.

9.) அதன் பிறகு தக்காளி சாஸ் ஊற்றி உப்பு, அஜினோமோட்டோ, மிளகுத்தூள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கிளறவும்.

10.) பின்னர், பொரித்து வைத்திருக்கும் காலிஃபிளவடர துண்டங்களை ஒவ்வொன்றாய் வாணலியில் போடவும்.

11.) மசாலாவுடன் நன்கு சேருமாறு துண்டுகளைப் போட்டு 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கவும்.

12.) இப்போது சுவையான கோபி மஞ்சூரியன் தயார் 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்