Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

விமான ரகத்தைத் தேர்ந்தெடுக்கப் பயணிகளுக்கு வாய்ப்பு?

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தை அடுத்து, போயிங் 737 Max ரக விமானங்கள் தொடர்பிலான சேவைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.   

வாசிப்புநேரம் -
விமான ரகத்தைத் தேர்ந்தெடுக்கப் பயணிகளுக்கு வாய்ப்பு?

(படம்: Singapore Airlines)

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தை அடுத்து, போயிங் 737 Max ரக விமானங்கள் தொடர்பிலான சேவைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

எந்த ரக விமானத்தில் பயணம் செய்கிறோம் என்பது குறித்துப் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய பதற்றத்தைத் தணிக்க, பயண நிறுவனங்கள் பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அமெரிக்காவின் பெரிய பயண இணையத் தளங்களில் ஒன்றான Kayak, வாடிக்கையாளர்கள், விமான ரகத்தின் அடிப்படையில் பயணங்களுக்கு முன்பதிவு செய்வதற்கு உதவத் திட்டமிட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான பயணிகள், போயிங் 737 Max ரக விமானச் சேவைகளைப் பயன்படுத்தத் தாங்கள் தயங்குவதாக சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்ததை அடுத்து, Kayak நிறுவனம் அந்த முயற்சியை மேற்கொண்டது.

விமான ரகத்தின் அடிப்படையில் பயணங்களை முன்பதிவு செய்யும் வசதி, இவ்வாரம் முதல் நடப்புக்கு வரும் என்று Kayak நிறுவனம் தெரிவித்தது.

Booking.com, Agoda.com ஆகிய இணையத் தளங்களின் துணை இணையத் தளமான Kayak வாயிலாக ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பயணிகள் விமானச் சேவைகளையும் ஹோட்டல்களையும் முன்பதிவு செய்கின்றனர்.
   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்