Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

KFC உணவகத்தில் ஆரோக்கிய உணவா?

KFC நிறுவனம் ஆரோக்கிய உணவுச் சேவை தொடர்பில் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
KFC உணவகத்தில் ஆரோக்கிய உணவா?

படம்: KFC Singapore

KFC நிறுவனம் ஆரோக்கிய உணவுச் சேவை தொடர்பில் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

ஓராண்டு ஆய்வு மேம்பாட்டு முயற்சிக்குப் பிறகு, Grilled Chicken leg எனப்படும் வாட்டிய கோழிக் கறி கொண்ட புதிய உணவை அது அறிமுகப்படுத்துகிறது.

அதன் கலோரி அளவு 360க்கும் குறைவு என்பது சிறப்பம்சம். 5 வெள்ளி 90 காசுக்குத் தனியாக அதைமட்டும் வாங்கி உணவகத்திலேயே உண்ணலாம்.

அல்லது மற்ற சில உணவுப் பொருட்களுடன் சிறப்புத் தொகுப்பாக அதை எடுத்துச் செல்ல விரும்புவோர் அல்லது விநியோகச் சேவைக்குப் பதிந்துகொள்வோர் 8 வெள்ளி 95 காசு செலுத்தவேண்டும்.

நாளை முதல், KFC சிங்கப்பூரின் கிளைகள் அனைத்திலும்,வாட்டிய கோழிக் கறியைச் சுவைக்கலாம்.

ஆனால், சாங்கி விமான நிலைய முனையம் 1, ஜூரோங் வேஸ்ட் 51, KidZania, சிங்கப்பூர் விலங்குத் தோட்டம், தோ பாயோ லோரொங் 1 ஆகிய இடங்களில் உள்ள கிளைகளில் மட்டும் அது கிடைக்காது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்