Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சொடக்கு மேல் சொடக்கு.... உங்களால் போடமுடியுமா?

கைவிரல்களைச் சொடக்கிடுவது குறித்து மூன்று கணிதப் பயன்பாடுகளின் உதவியுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சொடக்கு மேல் சொடக்கு.... உங்களால் போடமுடியுமா?

(படம்: AFP)

கைவிரல்களைச் சொடக்கிடுவது குறித்து மூன்று கணிதப் பயன்பாடுகளின் உதவியுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவையும், ஃப்ரான்ஸையும் சேர்ந்த ஆய்வாளார்கள் அந்த விளக்கத்தை அளித்தனர்.

சொடக்கிடுவது குறித்து கிட்டத்தட்ட நூறாண்டுகளாக விவாதிக்கப்படுகின்றது.

சொடக்கிடும்போது மூட்டுகளை நாம் இழுக்கிறோம். அதனால் மூட்டுகளில் உள்ள synovial திரவத்தில் அழுத்தம் குறைகிறது.

அது திரவத்தில் குமிழிகளை உருவாக்குகிறது.

மூட்டுகளின் வெவ்வேறு பகுதிகளில் அந்த அழுத்தம் வேறுபடுகிறது. அதனால் குமிழிகளின் அளவு மிக சீக்கிரமாக மாறுபடுகிறது.

சொடக்கிடும்போது உண்டாகும் சத்தத்திற்குக் அதுவே காரணம்.

1971இல், மூட்டுகளில் உள்ள குமிழிகள் உடைவது சொடக்கிடும்போது உண்டாகும் சத்தத்திற்குக் காரணமாக கூறப்பட்டது.

பின்னர் அந்தக் கருத்து நிராகரிக்கப்பட்டது.

குமிழிகள் உடைவதால் மட்டுமின்றி, அவற்றின் அளவு மாறும்போதும் சத்தம் உண்டாகிறது என்பது புதிய கண்டுபிடிப்பு.

சிலரால் ஏன் சொடக்கிட முடிவதில்லை என்பதற்கும் ஆய்வு விளக்கம் அளிக்கிறது.

எலும்புகளுக்கு இடையே இயற்கையாகவே அதிக இடைவெளி இருப்பவர்களால் சொடக்கிட முடியாது.

அதிக இடைவெளியால் synovial திரவத்தில் உள்ள அழுத்தம் அதிகமாக மாறுவதில்லை. அதனால் எந்த சத்தமும் எழுவதில்லை.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்