Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பூச்சி, புழுக்களைச் சமைத்து உட்கொள்வீர்களா?

காலைச் சிற்றுண்டிக்கு புழுக்கள் நிறைந்த ஓட்ஸ், அல்லது பூச்சி மாவால் செய்த ரொட்டியைச் சாப்பிடுவீர்களா?

வாசிப்புநேரம் -
பூச்சி, புழுக்களைச் சமைத்து உட்கொள்வீர்களா?

படம்: REUTERS

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

காலைச் சிற்றுண்டிக்கு புழுக்கள் நிறைந்த ஓட்ஸ், அல்லது பூச்சி மாவால் செய்த ரொட்டியைச் சாப்பிடுவீர்களா?

பலரிடையே அருவருப்பைத் தூண்டும் பூச்சிகளை அன்றாட உணவில் சேர்க்க முனைகின்றனர் ஆராய்ச்சியாளர்கள் சிலர். அடுத்த 10 ஆண்டுகளில் பூச்சிகள் ஐரோப்பிய உணவில் பெரிய அளவில் சேர்க்கப்படும் என்று நம்புகின்றனர் அவர்கள்.

புழு வகைகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் உருவாகின்றன, அவற்றைச் சாப்பிடுவதால் இயற்கைக்கு நல்லது என்று கூறப்படுகிறது.

இளையர்கள், கூடிய விரைவில் பூச்சி வகைகளை எளிதில் தங்கள் உணவுகளில் சேர்த்துக்கொள்வர் என்பது நம்பிக்கை. ஊட்டச்சத்து மிகுந்த பூச்சி வகைகளை உருவாக்குவது, இறைச்சிக்காகக் கால்நடைகளைக் காட்டிலும் குறைவான பாதிப்பையே சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும்.

ஹாங்காங்கில், இப்போதே புழுக்களைக் கொண்டு உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.

எந்த உணவானாலும் சுவை மிகப் பெரிய பங்கை வகிக்கின்றது.

பூச்சிகள் சாப்பிடச் சுவையாக இருக்கும் என்று மக்களை நம்பவைத்தால் கூடிய விரைவில் மனப்போக்கு மாறும் என்பது நம்பிக்கை.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்