Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நாளை அன்னையர் தினத்திற்கு அம்மாவுக்கு அன்பளிப்பு இல்லையா...கடைசி நேர அன்பளிப்புகள் சில

அன்னையர் தினத்திற்கு நாளை மும்முரமாகத் தயாராகி வருகின்றனர் சிலர். மற்ற சிலரோ நாளை அன்னையர் தினம் என்பதை இந்தக் கதையின் தலைப்பைப் பார்த்து "அப்படியா?" என்று பதறியிருப்பார்கள்.

வாசிப்புநேரம் -

அன்னையர் தினத்திற்கு நாளை மும்முரமாகத் தயாராகி வருகின்றனர் சிலர். மற்ற சிலரோ நாளை அன்னையர் தினம் என்பதை இந்தக் கதையின் தலைப்பைப் பார்த்து "அப்படியா?" என்று பதறியிருப்பார்கள்.

கவலை வேண்டாம். இதோ சில அன்பளிப்பு யோசனைகள்.

1) காலை எழுந்ததும் சிற்றுண்டி செய்துதரும் தாயாருக்கு, ஒரு முறை பதிலுக்கு நாம் சிற்றுண்டி செய்து கொடுக்கலாம். தோசை, இட்லி இல்லையென்றாலும் ரொட்டி, பழங்கள், காப்பி போன்றவற்றைத் தாயாருக்கு பரிமாறலாம்.

2) தாயாருடன் சில மணிநேரம் சேர்ந்து கைவினைப் பொருள் ஒன்றை உருவாக்கலாம். அல்லது இருவரும் சேர்ந்து செடிகளை நடலாம். அந்தப் பொருளை அல்லது செடியைப் பார்க்கும் போது தாயாருடன் செலவிட்ட நேரம் நினைவுக்கு வரும்.

3) அம்மாவிடம் உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்வதில்லையா? மனத்தில் இருப்பதை மடலில் எழுதுங்கள். தாயாரிடமுள்ள அன்பைப் பற்றி ஒரு சில வரிகளைக் கவிதை வடிவிலோ கதை வடிவிலோ நீங்கள் எழுதித் தரலாம். கடிதத்தையும் அம்மா நினைவுப் பொருளாக வைத்துக்கொள்ளலாம்.

4) பழைய புகைப்படத்தை மீண்டும் எடுக்கலாம். சிறு வயதில் நீங்களும் உங்கள் உடன்பிறப்புகளும் சேர்ந்து எடுத்த படத்தை இப்போது மீண்டும் உருவாக்க முனையலாம். அன்றும் இன்றும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்துத் தாயாருடன் சிரிக்கலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்