Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சிரித்து வாழவேண்டும்...புன்னகையின் மருத்துவப் பலன்கள்

 சிரித்து வாழவேண்டும்...புன்னகையின் மருத்துவப் பலன்கள்

வாசிப்புநேரம் -
சிரித்து வாழவேண்டும்...புன்னகையின் மருத்துவப் பலன்கள்

படம்: PIXABAY

நலமாக இருக்க சிரித்து வாழ்வதே சிறந்த மருந்து என்று சிலர் கூறுவதைக் கேட்டிருப்போம்.

ஆனால் அது வெறும் பேச்சு இல்லை என்று கூறுகின்றனர் மருத்துவர்கள் சிலர்.

இதயத்திற்கு பயன்....

தற்போதைய இருண்ட சூழலில் இருந்து மனத்தைத் திசைதிருப்ப சிரிப்பு உதவும்...அதோடு, நாம் நலமாக இருப்பதற்கான ஒரு உத்தியாகவும் அது திகழ்வதாய் கூறியுள்ளார் மேரிலந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த இதய மருத்துவர் மைக்கல் மில்லர் (Michael Miller)

அதிக மனஅழுத்தத்தால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கி்றது. மனஅழுத்தம் ஏற்படும்போது நல்ல நகைச்சுவை உணர்வைக் கொண்டிருப்பது பதற்றத்தையும் குறைக்க உதவும் என்கிறார் அவர்.

சிரிக்கும்போது nitric oxide ரசாயனம் வெளியாக்கப்படுகிறது, அது ரத்தக் குழாய்களை விரிவாக்கி, ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாய் நியூயார்க் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார் டாக்டர் மில்லர்.

நார்வேயில் நடத்தப்பட்ட ஆய்வில் நகைச்சுவை உணர்வுடன் இருப்பவர்களுக்கு ஆயுள் காலம் கூடுவதாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டினார்.

மூளைக்கு நல்லது....

அதிகம் சிரிப்பதால், மனஉளைச்சலை ஏற்படுத்தும் cortisol, adrenaline சுரப்பது குறைந்து, endorphins சுரப்பிகளின் அளவு அதிகரிக்கப்படுகிறது.

நகைச்சுவைக் காணொளிகளைப் பார்ப்பதால் குறுகிய கால ஞாபக சக்தி, கற்கும் ஆற்றல் அதிகரிப்பதாக லோமா லிண்டா (Loma Linda) பல்கலைக் கழக ஆய்வு கண்டுபிடித்தது.

மனோவியல் ரீதியில் பயன்...

நகைச்சுவை உணர்வைக் கொண்டிருப்பது மீள்திறனுக்கும் மிக முக்கியம் என்றார் கொலம்பியா (Columbia) பல்கலைக் கழகத்தின் மனோவியல் பேராசிரியர் ஜார்ஜ் பொனான்னோ (George Bonanno)

நகைச்சுவை தீய உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்து, மாறுபட்ட கண்ணோட்டத்தை வழங்குவதாக கூறினார் அவர். அதனால் இன்னல் ஏற்படும்போது அதை அச்சுறுத்தலாகப் பார்க்காமல் சவாலாகப் பார்க்கும் எண்ணம் ஏற்படுவதாய் கூறினார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்