Images
  • parent
    (படம்: Pixabay)

பெற்றோர் பிள்ளைகளிடம் பொய் சொல்வது சரியா?

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

'பொய் சொல்ல இந்த மனத்திற்குத் தெரியவில்லை. சொன்னால் பொய் பொய் தானே' என்ற பாடல் வரிகளை நம்மில் பலர் கேட்டிருப்போம். வாழ்க்கையில் பிள்ளைகளிடமும் பலமுறை பொய் சொல்லியிருப்போம்.

ஆனால் அவ்வாறு செய்வதால் நன்மையைவிட தீமையே ஏற்படுவதாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெற்றோர் பொய் உரைப்பதால் பிள்ளைகள் பெரியவர்களாகும்போது, அவர்கள் பெற்றோரிடம் அதிகம் பொய் கூறுவதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டது.

ஆய்வில் சுமார் 380 சிங்கப்பூரர்கள் கலந்துகொண்டனர். பிள்ளை வளர்ப்பின்போது பொய் சொல்வதில் நேரம் மிச்சப்படுவதாய்த் தெரிவிக்கப்பட்டது.

பிள்ளைகள் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள பெற்றோர் பொய் சொல்லும்போது, பிள்ளைகளின் மனத்தில் நீடித்த பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆய்வு Journal of Experimental Child Psychology சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.  

Top