Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வீண் செலவுகள் - அவற்றை எவ்வாறு தவிர்ப்பது?

கொரோனா கிருமிப்பரவல் சூழலில் பலரின் வாழ்க்கைமுறை பெருமளவில் திசை திரும்பியுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் வேலையின்மை அதிகரித்திருக்கலாம், சிலருக்கு வருமானமும் குறைந்திருக்கலாம். 

வாசிப்புநேரம் -

கொரோனா கிருமிப்பரவல் சூழலில் பலரின் வாழ்க்கைமுறை பெருமளவில் திசை திரும்பியுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் வேலையின்மை அதிகரித்திருக்கலாம், சிலருக்கு வருமானமும் குறைந்திருக்கலாம்.

பாதகத்தைச் சாதகமாக மாற்றியமைக்கப் பலரும் முயற்சி செய்துகொண்டிருக்கும் வேளையில், வீண் செலவுகளைக் குறைப்பதை முதல்படியாகக் கொள்ளலாம்.

வீண் செலவு என்றால் என்ன? - தேவையற்றவற்றில் பணத்தைச் செலவிடுவதே வீண் செலவு.

அதனைத் தவிர்ப்பதற்கான வழிகள்:

Pixabay

1. வீட்டிலிருந்து வேலை செய்யும்போது அல்லது வேலை இடங்களிலிருந்து வேலைசெய்யும்போது வீட்டில் சமைத்த உணவு, வீட்டில் தயாரிக்கப்படும் பானம் ஆகியவற்றை உட்கொள்ளுங்கள்

  • உணவு விநியோகச் சேவைகளை அன்றாடம் நாடுவோர் அதிகம் செலவு செய்வதைத் தவிர்க்கமுடியாது. வெளியிலிருந்து சாப்பாடு, பானங்கள் வாங்குவோர் அவற்றுக்கு மேலும் அதிகமான பணம் அளித்துப் பெறவேண்டும்.

2. இணையத்தளச் சேவைகளுக்கிடையே இடைவெளி அமைத்துப் பதிவுசெய்யுங்கள்; தேவையற்ற சேவைகளுக்குப் பதிவு செய்வதையும் தவிர்க்கவேண்டும்.

  • Netflix போன்ற இணையச் சேவைகளுக்கு ஒரே நேரத்தில் பதிவுசெய்தால், ஒரே நேரத்தில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் பெருமளவிலான கட்டணம் செலுத்தவேண்டிய சூழல் வரலாம்.
(படம்: Pixabay)

3. கைத்தொலைபேசிக்கான மாதாந்திரக் கட்டணத்தைச் சரிபார்க்கவேண்டும்

  • தேவையற்ற சேவைகளை உங்கள் கைத்தொலைபேசித் திட்டத்திலிருந்து அகற்றி, குறைவான கட்டணத்தைச் செலுத்தலாம்

4. தேவையற்ற காப்பீட்டுத் திட்டங்களை நீக்கவேண்டும்

  • தேவையற்ற காப்பீட்டுத் திட்டங்களை நீக்குவதால், உங்களுக்கு நேரக்கூடிய மாதாந்திர, வருடாந்திரச் செலவுகளைப் பெருமளவில் தவிர்க்கலாம்.
  • புதிய திட்டங்கள், புதிய கட்டண முறைகள் அமைக்கப்படுவது வழக்கம். அவற்றைச் சற்றுக் கண்காணித்துப் பெற்றுக்கொள்ளலாம்.

5. நீங்கள் எதில் அதிகமாகப் பணத்தை வீணாகச் செலவு செய்கிறீர்கள்? அதன் காரணத்தைக் கண்டறிந்தால் தான் அதைத் தவிர்க்கலாம்

  • சிலருக்கு மனச்சங்கடம் ஏற்படும்போது அதிகமாக வீண்செலவு செய்வது வழக்கமாக இருக்கலாம். அதைத் தெரிந்துகொள்ளும்போது ஒருவர் அவரது செலவுகளை மேலும் கண்காணித்துத் தேவையற்ற சிலவற்றைத் தவிர்க்கலாம்.

 -RD Asia

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்