Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வீட்டிலேயே இருக்கவேண்டிய சூழலில் மேலும் என்ன செய்யலாம்? சலிப்பை அகற்ற 10 எளிமையான வழிகள்!

சிங்கப்பூரில் தற்போது கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தும்  கடுமையான நடவடிக்கைகள் நடப்பில் உள்ளன. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் தற்போது கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தும் கடுமையான நடவடிக்கைகள் நடப்பில் உள்ளன.

முடிந்த அளவுக்கு வீட்டிலேயே இருக்கும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வீட்டில் இருக்கும்போது மிகவும் சோம்பலாகவும் சலிப்பாகவும் இருப்பதாகப் பலரும் குறைகூறுகின்றனர்.

அந்த நிலையை அகற்ற 10 வழிகள்...

(படம்: Pixabay)

1. ஒவ்வொரு நாளும் குறிப்பு நூலில் உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யலாம். நாளடைவில் உங்களுக்கு வாழ்க்கையைப் பற்றி மேலும் தெளிவு ஏற்படலாம்.

2. Google தேடலில் "virtual trips" என்னும் இணையப் பயணங்களைத் தேடிப் பாருங்கள். அதன் மூலம் உங்களுக்கு விருப்பமான நாடுகளுக்குப் பாதுகாப்பாகப் பயணம் செய்யலாம்.

(படம்: Pixabay)

3. இணையத்தில் பேச்சாளர்கள் பேசுவதைக் கேட்டு மேலும் சிலவற்றைக் கற்றுக்கொள்ளலாம்.

4. இணையம் வழி நடத்தப்படும் வகுப்புகளுக்குப் பதிவுசெய்துகொள்ளலாம்.

படம்: REUTERS/Denis Balibouse

5. ஓவியக் கலை போன்றவற்றைக் கற்றுக்கொண்டு பயிற்சி செய்யலாம்

(படம்: Pixabay)

6. பாடல்கள் பாடலாம், ஆடல் ஆடலாம், சமைக்கலாம், அல்லது உடற்பயிற்சி செய்யலாம்... இவற்றைச் செய்யும்போது காணொளியாகப் பதிவுசெய்து நெருக்கமானவர்களுக்கு அனுப்பலாம். தன்னம்பிக்கை மிக்கவர்கள் அவற்றை Youtubeஇலும் பதிவு செய்யலாம்

(படம்: AFP)

7. புதிய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம், அதற்குப் பல்வேறு செயலிகளும் இணையத்தளங்களும் உள்ளன

படம்: REUTERS

8. வேறு இடங்களில் உள்ள குடும்பத்தார், நண்பர்களை இணையச் சந்திப்புகளில் சந்தித்து அவர்களிடம் பேசலாம்

9. நெருக்கமானவர்களின் பிறந்தநாள்களுக்கான பரிசுப் பொருள்கள், வாழ்த்து அட்டை அல்லது அவர்களோடு எடுத்த படங்கள் கொண்ட காணொளித் தொகுப்பு போன்றவற்றைத் தயார் செய்யலாம்!

10. YouTube மூலம் சமையல், தையல், முக ஒப்பனை போன்ற சில புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்