Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நீண்ட நேரம் வேலை செய்வதால் ஆண்டுக்கு 745,000 பேர் மரணம்: ஆய்வு

நீண்ட நேரம் வேலை செய்வதால், ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் பேர் இறப்பதாக உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -
நீண்ட நேரம் வேலை செய்வதால் ஆண்டுக்கு 745,000 பேர் மரணம்: ஆய்வு

(படம்: Pixabay/kropekk_pl)

நீண்ட நேரம் வேலை செய்வதால், ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் பேர் இறப்பதாக உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

கொரோனா கிருமித்தொற்றால் அந்தப் போக்கு மேலும் மோசமாகலாம் என அது சொன்னது.

நீண்ட நேரம் வேலை செய்வதால் ஏற்படக்கூடிய உயிரிழப்பு குறித்து, உலக அளவில் நடத்தப்பட்ட முதல் ஆய்வு அது.

2016ஆம் ஆண்டில், நீண்ட நேரம் வேலை செய்வதால் ஏற்பட்ட பக்கவாதம், இதயநோய் ஆகிய பிரச்சினைகளால் சுமார் 745,000 பேர் மாண்டனர்.

2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், அது சுமார் 30 விழுக்காடு அதிகம்.

ஒரு வாரத்தில், 55 மணி நேரம் அல்லது அதற்கு மேல் வேலை செய்வது கடுமையான சுகாதார அபாயம் என்றார் நிறுவனத்தின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், சுகாதாரப் பிரிவின் இயக்குநர் மரியா நேரா (Maria Neira).

மாண்டவர்களில் 72 விழுக்காட்டினர் நடுத்தர அல்லது வயதான ஆண்கள்.

தென்கிழக்காசியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவற்றை உள்ளடக்கிய மேற்கு பசிஃபிக் வட்டாரங்களில் வசிப்போர் ஆக அதிகம் பாதிக்கப்பட்டனர்.

கிருமித்தொற்றுச் சூழலில், ஊழியர்கள் நீண்ட நேரம் வேலை செய்யும் போக்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

- Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்