Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மதிய உணவிற்குப் பின் தூக்கமா? காரணம் என்ன?

மதிய உணவைச் சாப்பிட்டதும் கண் சொருகும். சில நிமிடங்கள் கண் அயர்ந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றும்.  இது ஏற்படுவது ஏன்? 

வாசிப்புநேரம் -


மதிய உணவைச் சாப்பிட்டதும் கண் சொருகும்.

சில நிமிடங்கள் கண் அயர்ந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றும்.

இது ஏற்படுவது ஏன்?

1.
உணவைச் செரிமானம் செய்ய உடல் கணிசமான அளவு சக்தியைப் பயன்படுத்துகிறது.

இதனால் ஏற்படும் உடல்சோர்வின் காரணமாக நமக்குத் தூக்கம் வருகிறது.

2.

சில உணவு வகைகளால் உடலில் அதிக அளவு இன்சுலின் (insulin) சுரக்கும்.

பொதுவாக சர்க்கரை, மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகள் போன்றவற்றை உண்ணும்போது கணையத்திலிருந்து அதிக இன்சுலின் சுரக்கிறது.

அதிக அளவு இன்சுலின் சுரக்கும்போது tryptophan எனும் அமிலம் மூளைக்குச் செல்கிறது.

இதனால் மூளையில் serotonin, melatonin ஆகிய ரசாயனங்கள் அதிகம் சுரக்கின்றன.

இவ்விரு ரசாயனங்களும் மூளையை அமைதிப்படுத்தி தூக்கம் வரச்செய்யும் தன்மை கொண்டவை.

3.
உணவு ஒவ்வாமையும் தூக்கம் வரக் காரணமாக இருக்கலாம்.

உணவு ஒவ்வாமைகள் பல விதங்களில் ஏற்படலாம்.

உணவு ஒவ்வாமை என்று நினைக்கும்போது பலர் அஜீரணம், வாயுத்தொல்லை போன்றவற்றையே நினைப்பார்கள்.

ஆனால் உணவு ஒவ்வாமை களைப்பாகவும் வெளிப்படலாம்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்