Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இறைச்சியால் சமைத்த உணவின் சுவை, தாவரங்களால் உருவாக்கப்பட்ட உணவுகளில் வருமா?

ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள், இறைச்சி உட்கொள்வதால் சுற்றுச்சூழல் மீதான தாக்கம் ஆகிய காரணங்களால் ஆசியாவில் அதிகமானோர் நிலைத்திருக்கக்கூடிய உணவை விரும்புவதாகக் கூறப்படுகிறது.

வாசிப்புநேரம் -
இறைச்சியால் சமைத்த உணவின் சுவை, தாவரங்களால் உருவாக்கப்பட்ட உணவுகளில் வருமா?

(படம்:AFP)

சிங்கப்பூரில் உள்ள ஓர் அதிநவீன ஆய்வகம், பிரபலமான ஆசிய உணவு வகைகளைத் தாவரங்களால் செய்யப்பட்ட இறைச்சியைக் கொண்டு செய்துவருகிறது.

ஆனால், உண்மையான இறைச்சி கொண்டு சமைத்த உணவின் சுவை, தாவரங்களால் உருவாக்கப்பட்ட உணவு வகைகளில் வருமா?

அந்த இலக்கை அடைய ADM ஆய்வகத்தில் உணவு விஞ்ஞானிகள், சுவை நிபுணர்கள் ஆகியோர் மும்முரமாக வேலை செய்கின்றனர்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள், இறைச்சி உட்கொள்வதால் சுற்றுச்சூழல் மீதான தாக்கம் ஆகிய காரணங்களால் ஆசியாவில் அதிகமானோர் நிலைத்திருக்கக்கூடிய உணவை விரும்புவதாகக் கூறப்படுகிறது.

இதுவரை, கோழி சாத்தே (satay), மாட்டிறைச்சி ரெண்டாங் (beef rendang) ஆகிய உணவு வகைகள் தாவரங்களைக் கொண்டு சமைக்கப்பட்டுள்ளதாக ADM குறிப்பிட்டது..

பெரும்பாலும், சோயா, பட்டாணி ஆகியவை கொண்டு இறைச்சியின் தன்மை உருவாக்கப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்