Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மேகன் மார்க்கலின் மெழுகுச் சிலை அறிமுகம்

பிரட்டனின் இளவரசர் ஹேரியை மணமுடிக்கவிருக்கும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலை நேரில் சந்திக்க முடியவில்லையா?

வாசிப்புநேரம் -
மேகன் மார்க்கலின் மெழுகுச் சிலை அறிமுகம்

(படம்: DANIEL LEAL-OLIVAS / AFP)

பிரட்டனின் இளவரசர் ஹேரியை மணமுடிக்கவிருக்கும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலை நேரில் சந்திக்க முடியவில்லையா?

வருத்தப்படத் தேவையில்லை. இனி லண்டனில் உள்ள அரும்பொருளகம் ஒன்றில் அவருடைய மெழுகுச் சிலையைக் கண்டு ரசிக்கலாம்.

திருமணத்திற்கு இன்னும் இரு வாரங்கள் உள்ள வேளையில் மேடம் டுசாட்ஸ் (Madame Tussauds) அரும்பொருளகம் குமாரி மேகனின் மெழுகுச் சிலையை அறிமுகப்படுத்தியது.

இன்று வெளியிடப்பட்ட சிலையின் விரலில் அவருடைய நிச்சயதார்த்த மோதிரம் உள்ளது.

மேலும் நிச்சயதார்தத்தை அறிவித்தபோது குமாரி மேகன் அணிந்திருந்த பச்சைநிற ஆடையை அவருடைய சிலையும் அணிந்திருக்கிறது.

வழக்கமாக இத்தகைய சிலைகளை ஆறு மாதங்களில் வடிக்கும் கலைஞர்கள் இம்முறை மிகக்குறைவான நேரத்திலேயே செய்து முடித்தனர்.

இளவரசர் ஹேரி, குமாரி மேகன் மணமுடிக்கவிருக்கும் மே 19ஆம் தேதிக்கு முந்திய நாள் சிலை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுவது திட்டம்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்