Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உருகும் சிரித்த முக Emoji- காலக்கட்டத்துக்குப் பொருத்தம் என்கின்றனர் இணையவாசிகள்

அடுத்த ஆண்டு மக்களின் திறன்பேசிகளில் மேலும் 37 புதிய Emoji தோற்றங்கள் வரவிருக்கின்றன.

வாசிப்புநேரம் -
உருகும் சிரித்த முக Emoji- காலக்கட்டத்துக்குப் பொருத்தம் என்கின்றனர் இணையவாசிகள்

(படம்: Emojipedia/ Instagram)

அடுத்த ஆண்டு மக்களின் திறன்பேசிகளில் மேலும் 37 புதிய Emoji தோற்றங்கள் வரவிருக்கின்றன.

Emoji எனப்படுவது முகக்குறிகளை அல்லது பொருள்களைக் குறிக்கும் சிறு படங்கள். அவற்றைக் குறுஞ்செய்தி அனுப்பும்போது பயன்படுத்தலாம் அல்லது சமூக ஊடகத்தில் எதையாவது பதிவேற்றம் செய்யும்போதும் பயன்படுத்தலாம்.

அங்கீகரிக்கப்பட்டுள்ள 37 புதிய Emojiகளில் ஒன்று, உருகும் சிரித்த முகக்குறி வடிவில் உள்ளது.

அது, கிருமிப்பரவல் சூழலில் பலரின் மனநிலையைச் சரிவரக் குறிக்கும் ஒன்றாகப் பல இணையவாசிகள் கருதுகின்றனர்.

2019ஆம் ஆண்டில் ஜெனிஃபர் டேனியல், நீல் கோன் (Jennifer Daniel, Neil Cohn) என்பவர்களால் அந்த முகக்குறி கொண்ட Emoji அமைக்கப்பட்டுள்ளது.

திருவாட்டி ஜெனிஃபர் Google நிறுவனத்தின் புத்தாக்க நிர்வாகி; டாக்டர் கோன் நெதர்லந்தில் உள்ள Tillburg பல்கலைக்கழகத்தின் துணைப்பேராசிரியர்.

மனப்பதற்றம், களைப்பு, மகிழ்ச்சியாய் இருப்பதைப் போல் நடிப்பது போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய முகக்குறி கொண்ட Emoji உருவாக்கப்படவில்லை என்பதை இருவரும் உணர்ந்திருந்தனர்.

அதன் பின்னர்தான் உருகும் சிரித்த முகம் கொண்ட Emoji உருவானது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்