Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மனநலம் பற்றி மனம் விட்டுப் பேசுங்கள்

சமீபத்தில், புகழ்பெற்ற வடிவமைப்பாளர் கேட் ஸ்பேடின் தற்கொலைச் செய்தி நம் செவிகளை எட்டியது. 

வாசிப்புநேரம் -
மனநலம் பற்றி மனம் விட்டுப் பேசுங்கள்

படம்: Pixabay

சமீபத்தில், புகழ்பெற்ற வடிவமைப்பாளர் கேட் ஸ்பேடின் தற்கொலைச் செய்தி நம் செவிகளை எட்டியது. அதிலிருந்து மீள்வதற்குள், சில நாட்களிலேயே அமெரிக்காவின் புகழ்பெற்ற சமையல் கலைஞர், தொலைக்காட்சிப் பிரபலம் ஆண்டனி பொர்டேய்னின் (Anthony Bourdain) தற்கொலை அனைவரையும் அதிர்ச்சிக் கடலில் மூழ்க வைத்தது.

வெளியில் சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியாகத் தோற்றமளிப்போரும் மனச் சோர்வுக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகக் கூடும். மனம் திறந்து பேசினாலொழிய, அவர்களின் உண்மையான எண்ணங்களைப் புரிந்துகொள்வது கடினம்.

மனம் திறந்து பேசுவதால் ஏற்படும் நன்மைகள் இவையே:

இயல்பு நிலைக்குத் திரும்புதல்

மன ஆரோக்கியம், சோர்வு, பதற்றம் ஆகிய பிரச்சினைகள் குறித்து பகிர்ந்துகொள்வதன் மூலம், அப்பிரச்சினைகளைச் சுலபமாக எதிர்கொள்ளும் மனப்பான்மை உண்டாகும். இதனால் இயல்பு நிலைக்குத் திரும்பும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

விழிப்புணர்வு

மனநலம் குறித்து மற்றவர்களிடம் வெளிப்படையாகப் பேசும்போது, இதைப் பற்றி மேலும் பலர் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்தப் பிரச்சினை எனக்கு மட்டுமல்ல, யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும் என்ற விழிப்புணர்வு உண்டாகும். அதுமட்டுமின்றி, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி செய்ய முடியும்.

மன பாரம் குறையும்

ஒருவரிடம் மனம் விட்டுப் பேசும்போது அது அவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் உதவியாக அமையும். இதன் மூலம் உங்களுக்கு ஆதரவும் கிட்டும் மன பாரமும் குறையும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்