Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பால் இல்லாத Miloவா? இவ்வாரத்திலிருந்து மலேசியாவில் வாங்கலாம்...

Miloவைப் பால் இல்லாமல் குடித்தால், அதில் சுவை குறையும் என்பதைப் பலரும் நம்பிவருவதால் அதில் பாலையும் கலக்கிக் குடிக்கின்றனர்...

வாசிப்புநேரம் -

Miloவைப் பால் இல்லாமல் குடித்தால், அதில் சுவை குறையும் என்பதைப் பலரும் நம்பிவருவதால் அதில் பாலையும் கலக்கிக் குடிக்கின்றனர்...

ஆனால், பால் இல்லாமல் அதனைக் குடித்தால் சுவை நன்றாக இருக்குமா?

Milo என்பது உலகெங்கும் பிரபலம் பெற்ற ஒருவகை சாக்லேட் மால்ட் பானம் (chocolate malt).

அதனை, பால் பொருள்கள் இல்லாமல் தயாரித்துள்ளது Nestlé நிறுவனம்.

அந்தப் புதுவகை Milo, இவ்வாரம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் முதலில் வெளியாகவுள்ள பாலற்ற Milo-வை, மற்ற நாடுகளிலும் கூடிய விரைவில் அறிமுகம் செய்ய, Nestlé திட்டமிடுகிறது.

அனைவருக்கும் எம்மாதிரியான பானம் அருந்த விருப்பம் என்பதைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கும் நோக்கில், அந்தப் புதுவகை பானத்தை வெளியிட்டுள்ளதாக நிறுவனத்தின் மலேசியா, சிங்கப்பூர்க் கிளைத் தலைவர் குறிப்பிட்டார்.

முழுக்க முழுக்க, தாவரப் பொருள்களை அடிப்படையாகக் கொண்ட பானத்தை உருவாக்குவதோடு, பலருக்கும் பிடித்த சுவையில் அதைச் செய்வதே நிறுவனத்தின் குறிக்கோள்.

அந்தப் புதுவகை Milo பானம், பசும்பாலுக்குப் பதிலாக, சோயா, ஓட்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

- CNN  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்