Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வீட்டைச் சுத்தம் செய்யப் பொருள்களைக் கலந்து பயன்படுத்துகிறீர்களா? ஆபத்து!

பிளீச்சுடன் (Bleach) எலுமிச்சை சாறா?

வாசிப்புநேரம் -

பிளீச்சுடன் (Bleach) எலுமிச்சை சாறா?

காடியும் (vinegar) பேகிங் சோடாவுமா (baking soda)?

அவற்றை எல்லாம் கலக்கலாமா? அது பாதுகாப்பானதா?

தற்போதைய கிருமித்தொற்றுச் சூழலில், வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதில் பலரும் கண்ணும் கருத்துமாக இருக்கலாம்.

அதற்காக, சமூகத் தளங்களில் பரிந்துரைக்கப்படும் சில வித்தியாசமான கலவைகளையும் பயன்படுத்திப் பார்த்திருக்கலாம்.

ஆனால், அந்த ரசாயனங்களைக் கலந்து பயன்படுத்துவதில் ஆபத்து ஏதும் உள்ளதா?

பிளீச் எனும் சுத்தம் செய்யும் திரவம் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால், அதை மற்ற பொருள்களுடன் கலக்கும்போது பல ஆபத்தான ரசாயனங்கள் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.

அது மனிதர்கள், விலங்குகளின் சுகாதாரத்திற்குத் தீங்கு விளைவிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.


எந்தெந்தப் பொருள்களைக் கலக்கக்கூடாது?

  • பிளீச் மற்றும் அம்மோனியா (ammonia)

வீட்டைச் சுத்தம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பல பொருள்களில் அம்மோனியா உண்டு.

பிளீச், அம்மோனியா கலவை, உடம்பில் பட்டால், சரும, கண், சுவாசக்குழாய் எரிச்சல் ஏற்படலாம்.

கல்லீரல், சிறுநீரகம், நரம்புகள் ஆகியவையும் பாதிப்படையலாம்.

  • பிளீச் மற்றும் பூசனம் அகற்றும் திரவம்

பூசனம் அகற்றும் திரவங்களில் பொதுவாக அமிலம் இருக்கும்.

பிளீச்சுடன் அமிலம் கலந்தால் குளோரின் (chlorine) வாயு உருவாகலாம்.

அது சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

  • பிளீச் மற்றும் காடி, எலுமிச்சை சாறு போன்ற அமிலங்கள்

பிளீச்சுடன் அமிலப் பொருள்களைக் கலக்கும்போது, அதிலிருந்து வரக்கூடிய வாயு, உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது.

  • பிளீச் மற்றும் ஆல்கஹால் (rubbing alcohol)

பிளீச்சுடன் கிருமி நீக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் ஆல்கஹாலைக் கலக்கும்போது, மயக்கம் ஏற்படுத்தக்கூடிய chloroform உருவாகிறது.

அதனால், உடல் உறுப்புகள் பாதிப்படையலாம்.

  • காடி மற்றும் பேகிங் சோடா

அந்தக் கலவையால் பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால், பலனும் ஒன்றும் இல்லை.

அதை அடைத்து வைத்தால், அதிலிருந்து வெளியாகும் கரியமில வாயுவால், அது வெடித்திட வாய்ப்பு உண்டு.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்