Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கைத்தொலைபேசியை விரைவாக மின்னூட்டம் (Charge) செய்வது எப்படி?

கைத்தொலைபேசிகள் அன்றாடத் தேவையாகிவிட்ட காலகட்டத்தில் இருக்கிறோம். தொடர்புகொள்ள, குறிப்பெடுக்க, சேவைகளை நாட, இணையத்தைப் பயன்படுத்த, கணக்குப் பார்க்க, செலவு செய்ய ....

வாசிப்புநேரம் -
கைத்தொலைபேசியை விரைவாக மின்னூட்டம் (Charge) செய்வது எப்படி?

படம்: PIXABAY

கைத்தொலைபேசிகள் அன்றாடத் தேவையாகிவிட்ட காலகட்டத்தில் இருக்கிறோம். தொடர்புகொள்ள, குறிப்பெடுக்க, சேவைகளை நாட, இணையத்தைப் பயன்படுத்த, கணக்குப் பார்க்க, செலவு செய்ய ....

எல்லாவற்றுக்கும் கைத்தொலைபேசிதான். அதனால், கைத்தொலைபேசிகளில் மின்னூட்டம் குறைந்துவிட்டால் பெரும் சிரமமாகிவிடுகிறது.

கைத்தொலைபேசிகளை எப்படி விரைவாக மின்னூட்டம் செய்யலாம்? தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுவது.....

--'Airplane Mode' என்ற செயல்முறைக்கு மாற்றி மின்னூட்டம் செய்யவேண்டும்.

--கணினி போன்ற கருவிகளை விடுத்து, நேரடியாக சுவரில் பதித்திருக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்தி மின்னூட்டம் செய்யவேண்டும்.

--கைத்தொலைபேசியின் மின்னூட்டம் மிகவும் குறைந்து, சூடாகிப் போகும் நிலைக்கு முன்பாகவே மின்னூட்டம் செய்துவிடவேண்டும்.

--மின்னூட்டம் செய்யும்போது, கைத்தொலைபேசியை முற்றிலுமாக அணைத்துவிடுங்கள்.

--தேவையில்லாத செயலிகளை மூடிவிட்டுப் பின் மின்னூட்டம் செய்யவேண்டும்.

--சில கைத்தொலைபேசிகளில் 'Charge Mode' எனும் தெரிவு இருக்கும். அதை முடுக்கிவிட்டால், கைத்தொலைபேசி விரைவாக மின்னூட்டம் செய்துகொள்ளும் தன்மைக்கு மாறும்.

-- பொதுவாக சூடான இடத்தில் வைப்பது, அதிக நேரம் வெயிலில் வைத்திருப்பது - இவை கைத்தொலைபேசியின் மின்னூட்ட சக்தியைக் குறைக்கும்.

--அறுந்துபோன, நைந்துபோன கம்பிவடங்களைப் பயன்படுத்துவதால், மின்னூட்டம் தாமதமாகலாம். அதேசமயம், கைத்தொலைபேசியில் கம்பிவடத்தைச் செருகும் இடம் சுத்தமாக இருக்கிறதா என்பதையும் பார்க்கவேண்டும்.

--சில வகை கைத்தொலைபேசி உறைகள் வெப்பத்தை வெளியேறவிடாது என்பதால், உறைகளை அகற்றி, கைத்தொலைபேசியின் சூட்டைக் குறைத்துப் பின் மின்னூட்டம் செய்யலாம்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்