Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மனவுளைச்சலா? அம்மாவை அழைக்கலாமே..

அன்னையிடம் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள முடியாது என்று தோன்றலாம்.. ஆனால் மனவுளைச்சல் ஏற்படும் தருணங்களில் அன்னையிடம் சற்று பேசுவதால் ஏற்படும் நன்மைகள் பல என ஆய்வொன்று கூறுகிறது.        

வாசிப்புநேரம் -
மனவுளைச்சலா? அம்மாவை அழைக்கலாமே..

(படம்: Pixabay)

சிறு பிள்ளைகளாக இருக்கும்போது கண் விழிப்பதிலிருந்து இரவில் தூங்கச் செல்லும்வரை நாம் பெரும்பாலும் அன்னையின் உதவியையே நாடியிருப்போம்..

காலம் உருண்டோட, நம்மால் அனைத்தையும் சமாளித்துக்கொள்ள முடியும் என்ற நினைப்பு..

அன்னையிடம் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள முடியாது என்று தோன்றலாம்..

ஆனால் மனவுளைச்சல் ஏற்படும் தருணங்களில் அன்னையிடம் சற்று பேசுவதால் ஏற்படும் நன்மைகள் பல என ஆய்வொன்று கூறுகிறது.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மடிசன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் அந்த ஆய்வை மேற்கொண்டனர்.

7 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகள் ஆய்வில் பங்கெடுத்தனர்.

சவால்மிக்க சில பணிகளில் ஈடுபட்ட பிறகு அவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.

முதல் குழுவிலிருந்து சிறுமிகள் தங்களின் தாய்மாருடன் 15 நிமிடங்கள் செலவழித்தனர்.

இரண்டாவது குழுவினர், அம்மாவுடன் தொலைபேசியில் உரையாடினர்.

மூன்றாவது குழுவைச் சேர்ந்தோர் திரைப்படம் பார்த்தனர்.

உணர்வுபூர்வ பந்தத்தோடு தொடர்புடைய ஒருவருக்கு மகிழ்ச்சியான உணர்வைத் தரும் சுரப்பி அதிகமாகச் சுரக்கிறது.

முதல் இரண்டு குழுக்களைச் சேர்ந்த சிறுமிகளிடையே அம்மாவுடனான தொடர்புக்குப் பிறகு அது அதிகரித்துக் காணப்பட்டது.

அதே இரண்டு குழுக்களிடையே மனவுளைச்சலும் குறைந்து காணப்பட்டது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்