Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கணினி விளையாட்டைச் சிந்தனையாற்றல் கொண்டே விளையாடும் குரங்கு...எப்படி?

தொழில்நுட்பத் துறையில் சிறந்துவிளங்கும் செல்வந்தர் இலோன் மஸ்க், குரங்கு ஒன்றைக் கணினியில் விளையாடச் செய்துள்ளார். 

வாசிப்புநேரம் -

தொழில்நுட்பத் துறையில் சிறந்துவிளங்கும் செல்வந்தர் இலோன் மஸ்க், குரங்கு ஒன்றைக் கணினியில் விளையாடச் செய்துள்ளார்.

மூளையில் புதிய சில்லுப் பொருத்தப்பட்டதால், குரங்கு கணிணியில் விளையாட முடிந்தது.

மூளை நுண் சில்லு உருவாக்கும் Neuralink நிறுவனம் வெளியிட்ட காணொளியில் "பேஜர்" என்ற குரங்கின் மூளையின் இரு பக்கங்களிலும் நுண் சில்லு பொருத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

"Mind Pong" விளையாட்டில் புகுந்து விளையாடியது "பேஜர்". கட்டுப்பாட்டு விசையைப் பயன்படுத்த அதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், சிந்தனைத் திறன் அடிப்படையில் கணினியில் விளையாடியது "பேஜர்".

முடக்குவாதம் உள்ளவர்கள், சிந்தனைத் திறனைக் கொண்டு அதிவேகமாகத் திறன்பேசியைப் பயன்படுத்த Neuralink தொழில்நுட்பத் தயாரிப்பு உதவும் என்று திரு. மஸ்க் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்