Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அதிகமான நிறுவனங்கள் ஊழியர்களை premium economy பிரிவில் பயணம் செய்ய விடுகின்றன:ஆய்வு

வேலை நிமித்தமாக ஊழியர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது அவர்களின் செலவுகளுக்கு அப்பால் அவர்களின் வசதிக்கு முதலாளிகள் முக்கியத்துவம் தருவதாகப் புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

வாசிப்புநேரம் -
அதிகமான நிறுவனங்கள் ஊழியர்களை premium economy பிரிவில் பயணம் செய்ய விடுகின்றன:ஆய்வு

படம்: Unsplash/Deva Darshan

சிங்கப்பூர்: வேலை நிமித்தமாக ஊழியர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது அவர்களின் செலவுகளுக்கு அப்பால் அவர்களின் வசதிக்கு முதலாளிகள் முக்கியத்துவம் தருவதாகப் புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

மற்ற பிரிவுகளைக் காட்டிலும் premium economy பிரிவுக்கான நிறுவன முன்பதிவுகள் வேகமாக நடைபெறுகிறது. Carlson Wagonlit Travel என்னும் அனைத்துலகப் பயண நிர்வாக நிறுவனமும் Travelport என்னும் பயண வர்த்தகத் தளமும் நடத்திய ஆய்வில் அது தெரியவந்துள்ளது.

ஆய்வில் 1.3 மில்லியன் முன்பதிவுகள் ஆராயப்பட்டன. 2015ஆம் ஆண்டு முதலாம் தேதியிலிருந்து 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை, சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானங்களின் முன்பதிவுகள் அலசி ஆராயப்பட்டன.

ஆண்டு அடிப்படையில், premium economy பிரிவுக்கான நிர்வாக முன்பதிவுகள் சுமார் 157 விழுக்காடு ஏற்றம் கண்டன.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்